அகமதாபாத், மே.10– குஜராத் மாநிலத் தில் கடந்த 7ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் அங்குள்ள தாகேட் மக்களவை தொகுதிக் கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப் போது தாகேட் தொகுதிக்கு உட்பட்ட பார்த்தம்பூர் வாக்குச் சாவடியில் அந்த தொகுதியின் பா. ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பாபோரின் மகன் விஜய் பாபோர் வாக்களிக்க சென்றார். அப்போது அவர் வாக்குச் சாவடிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். அதோடு நிற்காமல் வேறு 2 வாக்காளர்களின் ஓட்டையும் அவர் போட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, பார்த்தம்பூர் வாக்குச் சாவடியை பா.ஜனதாவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனிடையே கள்ள ஓட்டு போட்ட குற்றச்சாட்டில் விஜய் பாபோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் நாளை (11.5.2024) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, May 10, 2024
Home
இந்தியா
குஜராத்தில் வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்பிய விவகாரம் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
குஜராத்தில் வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்பிய விவகாரம் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment