தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும்,பொதுவுடைமை இயக்கங்களும் இணைந்து தமிழ்நாட்டில் செய்த முற்போக்குச் செயல்பாடுகள் ஏராளம்!
பல்லாவரம், மே 11 கடந்த 08.05.2024 அன்று மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் ரங்கநாத முதலி தெருவில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மிக சிறப் பாக நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்துகக்கு திராவிடர் கழகத்தின் தாம்பரம் மாநகர இளைஞரணி தலைவர் பொழிசை க.கண்ணன் தலைமை வகிக்க, தாம்பரம் மாநகர இளைஞரணி செய லாளர் ச.ச.அழகிரி வரவேற்புரை ஆற்றினார். பொதுக் கூட்டத்தின் தொடக்கத்தில் கழக அனகை நகரத் தோழர் சி.சிவாஜி தலைமையில் மாணவர்களின் சிலம்பம், அடிமுறை உள் ளிட்ட தமிழர்களின் வீரக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் உரை நிகழ்த்த வந்த திராவிடர் கழக பம்மல் நகர தலைவர் பம்மல் கோபி பேசுகையில் உயர்ந்த ஜாதி என்போர் பெயரிலே தெருக்கள் இருந்தது, ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரிலே தெருக்கள் இருந்ததா? தோளில் துண்டு போடும் உரிமை மறுக்கபட்ட காலமது, பெண்கள் இன்று அடைந்திருக்கும் உரிமைகள் ஏதும் இல்லாத காலமது அந்த நிலையெல்லாம் மாறி இன் றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களும்,பெண்களும் சம உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் தான் என்றும், இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச் சிக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அடிப் படையாக இருப்பதே தந்தை பெரியார் தான் என்றும் கூறினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தைச் சார்ந்த தோழர் சீராளன் பேசுகையில் தந்தை பெரியார் என்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருந்த காரணத் தால்தான் இங்கே பெயருக்குப் பின்னால் யாருக்கும் ஜாதிப் பெயர்கள் இல்லாத சூழல் இருந்து வருகிறது. நமக்கு ஏன் இந்த இழி நிலை என்று தந்தை பெரியார் ஜாதிச் சங்க மாநாடுகளிலும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பேசியவற்றைத் தொகுத்து ஒரு நூல் வந்திருக் கிறது. அதில் தந்தை பெரியார் அவர்கள் ஜாதிச் சங்க மாநாடுகள் சென்று அங்கே அவர் களுடைய ஜாதிப் பெயர்களையே கண்டித்துப் பேசியவர்தான் தந்தை பெரியார் என கூறினார்.
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட் டச் செயலாளர் தோழர் இரா.வேல்முருகன் பேசுகையில், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும்,பொதுவுடைமை இயக்கங்களும் இணைந்து தமிழ்நாட்டில் செய்த முற்போக்குச் செயல்பாடுகள் ஏராளம் என்றும், அன்றைக்கு ஊடகத் துறை என்பது முழுக்க ஆளும் வர்க் கத்தைச் சார்ந்தவர்களால் மட்டுமே அமைந் திருந்தது என்றும், குறிப்பாக பார்ப்பனர்கள் வசமே இருந்தது என்றும் கூறினார். இவர்கள் அத்தனைப் பேரும் அன்றைய காங்கிரசுக்கும், காந்திக்கும் முழு ஆதரவாக இருந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதோரில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ‘குடிஅரசு’ பத்திரிகை தான் முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பேசியது என்றும், 1926 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்த குடிஅரசின் தலையங்கத்தில் பெரியார் என்ன சொல்கிறார் என்றால் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் சுயமரியா தையை அலட்சியம் செய்கிறார்கள் என்று குறிப்பட்டதை விளக்கிப் பேசினார்.
இந்த நாடு உண்மையிலேயே சுதந்திரம் பெற்றிருந்தால் இங்கே உள்ள பெரும்பான்மைத் தொழிலாளர் கூட்டத்தை ஒரு சிறிய முதலாளி வர்க்கம் எப்படி சுரண்ட முடியும் என பேசினார். தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் இர.சிவசாமி பேசு கையில், விலங்கை விடவும் கீழாக மனிதர் களை நடத்துகின்ற இந்த அமைப்பு அதற்கு அங்கீகாரம் கொடுத்தது இந்த வர்ணாஸ்ரமம் என்றால் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வர்ணாஸ்ரமக் கோட்பாட்டில் இழி நிலை யில் உள்ள சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதே எனது இலக்கு என மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு உழைத்தவர் தான் தந்தை பெரியார் என்றும் கூறினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்ற வந்த திரா விடர் கழகக் கிராமப் பிரச்சாரக் குழு அமைப் பாளர் அதிரடி க.அன்பழகன் பேசுகையில், மக்களிடைய பண்பாட்டு ரீதியாக கலந்திருந்த மூட பழக்க வழக்கங்களையும் அதன்மீது சொல்லப்பட்டுள்ள புராணப் பொய்களையும், அதன் சூழ்ச்சிகளையும் விளக்கிப் பேசினார். தமிழர்கள் தங்கள் பண்பாட்டின் அடையாள மாக விளங்குகிற பொங்கல் திருநாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் பொங்கல் திருநாளை மட்டும் ஆரியர்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது என்றும் பேசினார். நம் மக்கள் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட மூடப் பழக்க வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் உணர்ச்சி பொங்க உரை ஆற்றினார். குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் இங்கே தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது என்றும், இந்த இயக்கத்தைப் பெரியார் தொடங்கினார். பிறகு மணியம்மையார் தலைமை ஏற்று தற்போது ஆதிக்க சக்தி களுக்கு எதிராக நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் வீர நடைபோட்டு சென்று கொண்டு இருக்கிறது என்றும் அன்றைய காலகட்டத்தில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந் தது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு குவளை யும், ஆதிக்க ஜாதிகளுக்கு ஒரு குவளையும் என்ற முறை இருந்த காலமது. இன்றைக்கு அப்படி ஏதேனும் தென்பட்டால் அந்த தேநீர் கடைக்காரரின் நிலை என்னவாக இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் உயர் கல்வி படிக்கச் செல்வோரில் அதிகப்படியா னோர் தமிழ்நாட்டை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப் பிட்டால் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் பல மடங்கு உயர்ந்து விளங்குகிறது என்றால், அதற்கு விதை போட்டவர் தந்தை பெரியார் என்றும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் மாணவர் களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம் என்பது ஒரு புரட்சி எனவும், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்காகச் செயல்படுத்தபட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை, விலையில்லாப் பேருந்துப் பயணம் போன்ற திட்டங்கள் மறுக் கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்டெ டுக்கும் நோக்கில் சிறப்பாகச் செயல்படுத்தபட்டு வருகிறது என்று கூறினார். நிறைவாக தாம்பரம் மாவட்ட மகளிரணித் தலைவர் இறைவி நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்ட தலைவர் ப.முத்தையன், வைத்திய லிங்கம், சி.சரவணபாலன், எஸ்.ஆர்.வெங்க டேஷ், மா.குணசேகரன், இரா.அருள், எஸ்.பி. திலீபன், எம்.ராஜு, மு.திருமலை,பி.சீனிவாசன், சு.மோகன்ராஜ், (தாம்பரம் நகர செயலாளர்) வி.இன்பதமிழ் பாரதி, நா.கோபி,(பம்மல் நகர தலைவர்) கு.ஆறுமுகம், சி.சிவாஜி, ஆ.விஜய், மா.தனலட்சுமி, கு.நா.இராமண்ணா, சி.வீர வேல், நி.பழனிசாமி, வி.சி.பிரபாகரன், ம.தாமோ தரன், சி.நாகராஜ், பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), இரா.சு.உத்ரா பழனிசாமி, சு.சுரேஷ், அ.ப.நிர் மலா,இனமாறன், சு.உமாபதி, எஸ்.விக்னேஷ் வரன், செ.சந்திரசேகர், அ.கவின், ம.மேகலா, க.செல்வா, சா.ஜெகதீஷ், ரா.கவுதம்பாபு, சா.தாமோதரன், க.மாணிக்கம், ஏ.வெற்றிவீரன், எஸ்.ராஜ், சுந்தர் ராஜன், பெ.அனுசுயா, வி.மனோகர், எஸ்.சதீஸ், யு.சவுமியா, யு.முகி லன், மு.ரோகித், ஆர்.நிவாஜன், அரங்க நாரா யணன், க.செல்லப்பன், தே.சுரேஷ், அ.அண் ணாதுரை, சி.சிவாஜி, சண்.சரவணன், சு.மணி மாறன், அ.அன்புச்செல்வன், யு.கலையரசி, யு.சிலம்பரசன், வி.வெற்றிச்செல்வி, தமிழ் செல்வி, வில்வேந்தன், அம்ரீஷ் சங்கர், அர்சினி, ரோகித், ஏகலைவன் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment