ஜனநாயக கூத்து வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளரின் கன்னத்தில் அறைந்த வாக்காளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

ஜனநாயக கூத்து வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளரின் கன்னத்தில் அறைந்த வாக்காளர்

தெனாலி, மே 14 ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட் பாளர் சிவக்குமாரும் அவரது ஆதரவாளர் களும் வந்தனர். அப்போது சிவக்குமார் வரிசையில் காத்திருக்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் சென்றார். இதற்கு ஒரு வாக் காளர் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார். இதற்கு பதிலடியாக வேட்பாளர் சிவக் குமாரின் கன்னத்தில் வாக்காளர் அறைந்தார். வேட்பாளரின் ஆதரவா ளர்கள், அந்த வாக்காளரை அடித்து உதைத்தனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு காவல்துறையினர் வந்து அந்த வாக்காளரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சிப் பதிவு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையம், வேட் பாளர் சிவக்குமாரை வாக்குப் பதிவு முடியும் வரை வெளியில் எங்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது. இதன்படி சிவக்குமார் கைது செய்ய பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

பிஜேபியின் அநாகரிகம்
முஸ்லிம் பெண் வாக்காளர்களின் புர்காவை நீக்கி ஆய்வு செய்த பிஜேபி வேட்பாளர்மீது வழக்குப் பதிவு
அய்தராபாத்,மே 14- வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அய்தராபாத் மக்களவை தொகுதி யில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் மாதவி லதா. இவர், ஏஅய்எம்அய்எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து போட்டியிடுகிறார். எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார்.
இதற்கிடையே, நான்காம் கட்டத் தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பர்தா அணிந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம், அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கச் சொன்னதுடன், பர்தாவை நீக்கி முகங்களை காண்பிக்கச் சொல்லி சோதனை செய்துள்ளார் பாஜக வேட்பாளர் மாதவி லதா. இந்தச் செயல் சர்ச்சையான நிலையில், மாதவி லதா மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அய்தரா பாத் ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் பக்கத்தில் வழக்குப் பதிவை உறுதிப்படுத்தியுள்ள அய்தராபாத் மாவட்ட ஆட்சியர் ரொனால்ட் ரோஸ், “வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்க அவர்களின் பர்தாவை நீக்க சொல்ல எந்த வேட்பாளருக்கும் உரிமை இல்லை. வாக்காளர்கள்மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர் முறையிட்டு இருக்கலாம். மாதவி லதா மீது மலக்பேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment