சென்னை, மே 13– சென்னையில் அகில இந்திய ரஷ்ய கல்விக் கண் காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் 11.5.2024 அன்று தொடங்கி வைத்தார்.
ரஷ்யாவில் உள்ள கல்வி நிறு வனங்களில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மய்யம் சார்பில் ஆண்டுதோறும் கல்வி கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக் கான (2024-2025) ரஷ்ய கல்விக் கண்காட்சி சென்னையில் மே 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மதுரை ரெசிடென்சி உணவகத்தில் மே 14-ஆம் தேதியும், திருச்சி பெமினா உணவகத்தில் மே 15-ஆம் தேதியும், சேலம் ஜிஆர்டி உணவகத்தில் மே 16-ஆம் தேதியும், கோவை கிராண்ட் ரிஜென்ட் உணவகத்தில் மே 17ஆம் தேதியும் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கல்வி கண்காட்சியில் ரஷ்யாவின் 8 முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாக பங்கேற் கின்றன. இதில் உயிரி தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் மற்றும் பொறியியல், மருத்துவ துறைகளுக்கான கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள் ளன.
சென்னை, ஆழ்வார்பேட்டை யில் உள்ள ரஷ்ய கல்வி மற்றும் கலாச்சார மய்யத்தில் நடைபெற்ற கண்காட்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத் ததைத் தொடர்ந்து அவர்
செய்தி யாளரிடம் பேசியது:
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரஷ்யா சென்று கல்வி கற்கின்றனர். நிகழாண்டுக் கான கல்விக் கண்காட்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார் கள் எழுகின்றன. தொடக்கம் முதல் நீட் தேர்வில் இதுபோன்ற புகார்கள் எழுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு பெறுவது தான். ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நீட் தேர்வில் இருந்து முற்றிலும் விலக்கு கிடைக்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஓலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல், கலாச்சார மய்ய இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
கடந்த கல்வியாண்டு நடை பெற்ற ரஷ்ய கல்விக் கண்காட்சியில் இந்திய மாணவர்களுக்கு 5,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டில் சுமார் 8,000 இடங்கள் வழங்கப்பட் டுள்ளன.
மருத்துவம் பயிலும் மாணவர்க ளுக்கு அரசு நிதியுதவியுடன் ஆண் டுக்கு ரூ.3 லட்சம் முதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய மாணவர்கள் நீட்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் கள் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மருத்துவம் பயில விண்ணப்பிக்கலாம்.
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் விண்ணப் பிக்கலாம்.
மேலும், ரஷ்யாவில் கல்வி கற் கவுள்ள மாணவர்களுக்கு சிஇடி, அய்இஎல்டி போன்ற முன்தகுதி தேர்வுகள் கிடையாது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 9282 221 221 எனும் கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள லாம்.
No comments:
Post a Comment