நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

featured image

சென்னை, மே 9- தமிழ் நாட்டில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக் கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், தொழில் நிறுவனங்க ளுக்கும் பல்வேறு அறிவு றுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.ஆனாலும், கட்டு மானம் சார்ந்த பணியா ளர்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவர் களும் நேரடி வெயி லில்இருக்கும் சூழல் உள் ளது. இதனால், பலர் உடல் உச்ச வெப்பநிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பக்கவாத பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதியாவதும், சிலர் உயிரிழப்பதும் நிகழ்கிறது. இதைத் தடுக்க, தொழில் நிறுவனங்களும், கட்டட உரிமையாளர்க ளும் தொழிலாளர் நலன் கருதி சில முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்ப வெப்ப நிலையில் நேரடி யாக பணியாற்றும்போது உடலில்உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற் படும். அதை அலட்சியப் படுத்தினால் ஒரு கட்டத் தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத் தகைய நிலை ஏற்படும் போது மருத்துவ சிகிச் சைகள் விரைந்து கிடைக் காவிடில் உயிரிழப்பு நேரிடலாம். எனவே, கட்டுமானப் பணியாளர்கள், விவசா யத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவ ரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும். அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னர் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணி யாற்றலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகை யில் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் வசதிகளை ஊழி யர்களுக்கு செய்து தர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment