மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து நாள் தோறும் ஏதாவது ஒன்றைக் கூறுவார், மேடையில் பேசுவார், காணொலியில் பேசுவார், மன்கிபாத் பேசுவார், அல்லது சமூக வலைதளங்களில் எழுதுவார், கரோனா முழு அடைப்பு காலத்தில் கூட நாள்தோறும் சமூக வலைதளம் மூலமாக பேசிக் கொண்டு தான் இருந்தார்.
இதில் ஒன்று கூட உண்மையானதாக இருக்காது. இதில் ஒரு வியப்பு என்ன வென்றால் அவர் உண்மைக்குப் புறம் பான தகவலைக் கூறிய உடனேயே சமூக வலைதளங்களில் அவர் கூற்று தவறானது என்று உடனடியாக பதில் வரும். இருப்பினும் அவர் இதைக் கடந்து அடுத்த பொய்யான தகவலைக் கூறச் சென்று விடுவார்.
10 ஆண்டுகளாக இதே நிலைதான். ஆனால், 09.05.2024 அன்று மிகவும் முக்கியமான நாள்.
காரணம் அன்றைய நாள் மோடியின் சமூக வலைதளக் கணக்கில் இருந்தோ, அல்லது வேறு எந்த ஒரு ஊடகத்தளத்தின் மூலமோ அவர் பேசவே இல்லை. அவரது அனைத்து தேர்தல் நாள் பரப்புரைகளும் ரத்து செய்யப்பட்டன.
அவர் பேசுவதாக இருந்த மேடை களில் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் பேசிக்கொண்டு இருந்தனர். ஆகவே 09.05.2024 அன்று இந்தியாவின் உண்மைக்கான நாள் என்றே கூறலாம்.
No comments:
Post a Comment