இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை 8 முறை சாம்பியன் - யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 28, 2024

இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை 8 முறை சாம்பியன் - யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்!

featured image

இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் பற்றி பார்க்கும் போது அதில் நிச்சயம் மேரி கோம் முன்னணியில் இருக்கிறார்.
அமெச்சூர் குத்துச்சண்டையில் அவர் செய்த சாதனையை எந்த வீரரும், வீராங்கனையும் உலகத்தில் செய்யவில்லை.

மேரி கோம் சாதனைகளால் குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் புகழ் உச்சத்தில் இருக்கிறது. இதை அத்தனை சாதாரணமாக அவர் செய்யவில்லை.

ஏழைக் குடும்பம்

மணிப்பூரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் மேரி கோம். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகள். அவரது தந்தை இளம் வயதில் மல்யுத்தத்தில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். தடகளத்தில் அதே ஆர்வத்துடன் இருந்த மேரி கோம், பின்னர் குத்துச்சண்டை விளையாட்டை கற்றுக் கொண்டார்.

சாதனை

2001 மகளிர் உலக வாகையர் பட்டத் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து தான் பங்கேற்ற ஒவ்வொரு மகளிர் உலக வாகையர் பட்டப் போட்டியிலும் தங்கம் வென்றார். ஏழு முறை மகளிர் உலக வாகையர் பட்டத் தொடரில் பங்கேற்று ஆறு தங்கம், ஒரு வெள்ளி வென்று அதிக தங்கம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

காமன்வெல்த் தங்கம்

மேலும், எட்டு உலக வாகையர் பட்டப் போட்டியிலும் பட்டத்தையும் வென்றுள்ளார் மேரி கோம். இது ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு அமெச்சூர் பாக்சிங்கில் மிகவும் அதிகம். காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் வீராங்கனையும் மேரி கோம் தான். 2018 காமன்வெல்த் போட்டிகளில் அவர் இந்த சாதனையை செய்து இருந்தார்.

விருதுகள்

இந்த ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக அர்ஜுனா விருது, பத்மசிறீ, பத்ம பூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்திய அரசு அவருக்கு அளித்து கவுரவித்துள்ளது. அவர் மாநிலங்களவை உறுப்பின ராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment