பேரா. மு.பி.பாலசுப்பிரமணியன் 85ஆவது பிறந்தநாள் சிறப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

பேரா. மு.பி.பாலசுப்பிரமணியன் 85ஆவது பிறந்தநாள் சிறப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

featured image

தென்காசி, மே 14- காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மேனாள் முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் மு.பி.பா. என்ற முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் 16.5.1939 ஆம் ஆண்டு தென் காசி மாவட்டம், அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். அவரது 85 ஆவது பிறந்த நாளை யொட்டி அய்யாபுரம் பேரா. மு.பி.பா. அறக்கட்டளை சார் பில் நான்காவது ஆண்டாக மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன.

வண்ணம் தீட்டுதல், வண் ணத்தாள் ஒட்டுதல், ஒலிக ளைக் கண்டுபிடித்தல், பலூன் ஊதுதல், எழுத்தை கண்டு பிடித்து சொல்லுதல், ஓவியம் வரைதல், பொருட்கள் நினைவு கூருதல், புதிய சொல் உரு வாக்குதல், எழுத்து திருத்தம் (தமிழ்,ஆங்கிலம்) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டன. இதில் அய்யாபுரம், குத்துக்கல் வலசை, கொட்டாகுளம் உள் ளிட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கான பரிச ளிப்பு விழா பேரா. மு.பி.பா. அறக்கட்டளை அறங்காவலர் மு.பி.பா. இன்பவல்லி தலைமை யில் நடைபெற்றது. அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், தற் போதைய தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, குற்றாலம் ராமையா, அய்யாபுரம் மூத்த முன்னோடிகள் மற்றும் கிராமப் பெரியவர்கள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், அறங்காவ லர்கள் ச.முத்துக்குமரன், பா.முத்தமிழ்ச்செல்வன், பா.அன்புச்செழியன், இரா.மணிவண்ணன், நெறியாளர் கள் து.இசக்கியம்மாள், பாப்பா லிங்கம், து.இராசசேகரன், முனைவர்.தா.சோபியா ரேச்சல் மேரி உள்ளிட்ட பல ரும் கலந்து கொண்டனர்.

போட்டி ஏற்பாட்டாளர் கள் சிவபாலா (நூலகர், பேரா. மு.பி.பா. நூலகம்), முகிலா, சுபாசிறீ மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் மு.பி.பா நூல கம். அவர் பிறந்த ஊரான அய்யாபுரம் கிராமத் தில் 2019 ஆம் ஆண்டு திறக்கப் பட்டது, தொடர்ந்து செயல் பட்டு வருகிறது.

No comments:

Post a Comment