ராகுல், மீண்டும் வாக்குறுதி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீடுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

ராகுல், மீண்டும் வாக்குறுதி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீடுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்!

featured image

லக்னோ, மே 29- ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம்!
உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்கோன் நகரில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்றார்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசிய தாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் ஒருபுறம் ‘இந்தியா’ கூட்டணியும், அரசமைப்புச் சட்டமும் இருக்கின்றன. மற்றொரு புறம், அரசமைப்புச் சட்டத்துக்கு முடிவுகட்ட விரும்புபவர்கள் இருக்கி றார்கள். ஆனால் ‘இந்தியா’ கூட்டணி, தனது இதயம், உயிர், ரத்தம் மூலம் அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்.

உச்சவரம்பு நீக்கம்
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன். இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும். இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும். மேலும், ‘இந்தியா’ கூட்டணி அரசு, ‘அக்னிபத்’ திட்டத்தை கிழித்து குப்பைக் கூடையில் வீசும். ஆட்சியில் அமர்ந்தவுடன் நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்று வோம். பிரதமர் மோடி தன்னை பரமாத்மா அனுப்பி வைத்ததாக கூறி வருகிறார். அவரை அதானிக்கு உதவு வதற்குத்தான் கடவுள் அனுப்பி வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவவதற்கு அல்ல.
-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment