மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 50 விடுதலை சந்தா வழங்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 50 விடுதலை சந்தா வழங்க முடிவு

featured image

மேட்டுப்பாளையம், மே 13- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12.5.2024 அன்று காலை 10 மணி அளவில் மேட்டுப்பாளை யம் வசந்தம் ஸ்டீல் கடையில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக் குமார் கூட்டத்திற்கு தலைமை ஏற்று இயக்க செயல்பாடுகள் தமிழக தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு விடு தலை தந்த பரவலாக சேர்க்கப் பட வேண்டியதன் அவசியம் முக்கியத்துவம் குறித்து விரி வாக உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி ஆகியோர் முன் னிலை ஏற்று உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் சந்திரன், குட்டை புதூர் நாராயணசாமி, மாவட்ட இளைஞரணி செய லாளர் நா. பிரதீப், குட்டைப் புதூர் முகமது ஹாரிஸ், மு. பரத், மா.விக்னேஷ் பி.அஜய் நா.கணேசன்.செல்வராசு கோவை திராவிட மணி உள் ளிட்ட கழகத் தோழர்கள் பங் கேற்று கருத்துரையாற்றி னார்.

பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் முதற் கட்டமாக இரண்டு விடுதலை சந்தாகளை வழங்கினார்
குட்டைபுதூரில் நடை பெறும் பெரியார் விளையாட் டுக்கழக கபாடி போட்டிக்கு மூன்றாவது பரிசாக ரூ 2555 மேட்டுப்பாளையம் பாலசுப்ரமணியன் வழங்கி மகிழ்ந்தார்கள்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது
24-3-2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்டு ஏடான விடுதலைக்கு மேட்டுப் பாளையம் கழக மாவட்ட சார்பில் 50 விடுதலைச் சந் தாகளை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டுவிழா – குடிஅரசு ஏடு நூற்றாண்டுவிழா கூட்டங் களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
மே-26 மேட்டுப்பாளையம் குட்டைபுதூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் விளை யாட்டுக்கழகமும் குட்டை புதூர் சிவகாமி குடும்பத்தினர் இணைந்து நடத்தும் சவாரி போட்டிக்கு மாவட்ட திரா விட கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.

No comments:

Post a Comment