சென்னை, மே 14- அய்ந்து வயது வரையிலான குழந்தைகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். மேலும் அய்ந்து வயது முதல் 12 வயது வரை “அரை டிக்கெட்” அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களால் இயக்கப் படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக் கப்படுவர் என அண்மையில் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தில் போக்குவரத்துத்துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தி ருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் 3 முதல் 12 வயது வரையிலான குழந் தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வரு கிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூ லிக்கப்படாது, அவர்கள் இலவச மாக பயணிக்கலாம் என அறிவிக் கப்பட்டது. இது பொதுமக்களி டையே நல்ல வரவேற்பை பெற் றிருந்தது.
இந்நிலையில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந் தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த “அரை டிக்கெட்” அனுமதி, தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந் துகளில் 5 வயது வரை உள்ள குழந் தைகள் பயணச் சீட்டு கட்டண மில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.
ஏற்கெனவே அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இல வச பயணம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போதி லும், சில நேரங்களில் போக்கு வரத்து ஊழியர்கள், நடந்து கொள்ளும் விதத்தால் விமர்சனத் தையும் எதிர்கொள்ள நேரிட்டது.
5 வயது வரையிலான குழந் தைகள் எனும் போது, வயதை நிரூ பிப்பதற்கான ஆவணம் தேவையா என்பது போன்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுவரை யிலும் உத்தேசமாக குழந்தைகள் உயரத்தைப் பார்த்தே பயணச் சீட்டு கணக்கிடும் முறை இயல்பில் நடைமுறையில் உள்ளது. எனவே இலவச பயணச் சீட்டு குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கும், போக்குவரத் துக் கழக ஊழியர்களுக்கும் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment