சென்னை,மே14– ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில், பாஜ நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் அழைப் பாணை அனுப்ப சிபிசிஅய்டி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 6ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதி காரிகளால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஅய்டி காவல்துறையினர் ஆவ ணங்களைப் பெற்றிருந்த நிலையில், பல்வேறு நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அதில் பணத்தை கொண்டு சென்ற தாக கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உற வினர் முருகன், அவரின் உதவியாளர்கள் ஆசைதம்பி, ஜெய் சங்கர் உள்ளிட்டவர்க ளிடம் சென்னை சிபிசிஅய்டி அலுவலகத் தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி கோவர்தன் என்பவர் விடுதியில் வைத்து பணம் கைமாற்றப்பட்டதாக தெரிவித்த தன் அடிப்படையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவர்தன் வீடு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது விடுதி யில் சிபிசிஅய்டி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை முடிவில் பணம் கைமாற்றப்படுவதற்கான முக்கிய ஆவ ணங்களை சிபிசிஅய்டி காவல் துறையி னர் கைப்பற்றியதாக தகவல் வெளியா கியது. மேலும், விசாரணையில் கோவர் தனுக்கு சொந்தமான விடுதியில் பணம் கைமாற்றப்பட்டு, அங்கிருந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந் தமான உணவு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், இந்த பணத்தை கோவர்தனின் கார் ஓட் டுநர் விக்னேஷ் என்பவர்தான் கொண்டு சென்றதாக தகவல் வெளியான நிலையில், கார் ஓட் டுநர் விக்னேஷுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி விசாரிக்க
சிபிசிஅய்டி காவல்துறையினர் திட்ட மிட் டுள்ளனர்.
No comments:
Post a Comment