கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் நின்ற லாரி மீது கார் மோதி 4 அர்ச்சகர்கள் பலி கோவிலில் யாகம் நடத்திவிட்டு திரும்பியபோது பரிதாபம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் நின்ற லாரி மீது கார் மோதி 4 அர்ச்சகர்கள் பலி கோவிலில் யாகம் நடத்திவிட்டு திரும்பியபோது பரிதாபம்

அரியலூர், மே 11- அரியலூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கடந்த 7.5.2024 அன்று வேகமாக வந்த கார் மோதியது- இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த அர்ச்சகர்கள் நால்வர் பலியானார்கள். அவர்கள் கோவிலில் யாகம் நடத்திவிட்டு வீடு திரும்பியபோது இந்த பரிதாபம் நேர்ந்தது.

தஞ்சாவூர் மேலவீதி அக்ரஹாரத்தை சேர்ந்தவர்கள் குருமூர்த்தி மகன் ஈஸ்வரன் (வயது 24), தேவா மகன் செல்வா (வயது 17), இ.பி. காலனி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பலராமன் மகன் புவனேஷ் என்கிற கிருஷ்ணசாமி (வயது 18), கருதட்டாங்குடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 23). அர்ச்சகர்களான இவர்கள் 4 பேரும் ஒரு காரில் கடந்த 6.5.2024 அன்று காலை பெரம்பலூரில் உள்ள ஒரு கோவிலில் அமாவாசை யாகம் நடத்த சென்றனர். காரை ஈஸ்வரன் ஓட்டினார். கோவிலில் யாகம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நால்வரும் காரில் திரும்பியபோது, அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிமீது திடீரென கார் மோதியது.4 பேர் பலி
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அர்ச்சகர்களான ஈஸ்வரன்(வயது 24), புவனேஷ் கிருஷ்ணசாமி(வயது18), செல்வா (வயது17), சண்முகம் (வயது23) ஆகிய இவர்கள் நால்வரும் அரியலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது விபத்தில் உயிரிழந்துள்ளனர்.ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment