39இல் 10 காலி! பா.ஜ.க.வுக்கு 5 ஆம் கட்டத் தேர்தல் தந்த அதிர்ச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

39இல் 10 காலி! பா.ஜ.க.வுக்கு 5 ஆம் கட்டத் தேர்தல் தந்த அதிர்ச்சி!

‘தராசு’ ஷ்யாம் கணிப்பு

சென்னை, மே 23- நடந்து முடிந்துள்ள 5 ஆம் கட்டத் தேர்தலில் கடந்த முறை வென்ற 39 தொகுதிகளில் பாஜக 10 இடங்களை இழக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
மொத்தம் 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்ட மக்கள வைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போகின்ற 2 மாநிலங்களின் தேர்தல் அட்டவணை இந்த 5 ஆம் கட்டத்திற்குள் தான் அடங்கி இருந்தது.
மகாராட்டிராவும் உத்தரப்பிரதேசமும்தான் கடந்த முறை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த மாநி லங்கள். இந்த 2 மாநிலங்களிலும் பழைய செல்வாக்கை இந்த முறை இழந்துள்ளது பாஜக என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த 5 ஆம் கட்டத் தேர்தலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், மிக முக்கியமான தலைவர்களின் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இதன் உள்ளாகத்தான் வருகிறது.

குறிப்பாக அமேதி தொகுதி, ராஜ்நாத்சிங் போட்டிப் போடும் தொகுதி, அயோத்தி ராமர் கோயில் உள்ள ஃபைசாபாத் தொகுதி ஆகியவற்றில் எல்லாம் இந்த 5 ஆம் கட்ட தேர்தலின் போதுதான் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மகாராட்டிராவில் உத்தவ் தாக்ரேவின் கட்சியை உடைத்தது, சரத்பவார் கட்சியை உடைத்து இரண்டாக் கியது எனப் பல தவறுகளை பாஜக செய்துவிட்டது. இதனால் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர் என்று தெரிகிறது.
கடந்த 2019இல் பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் இந்த முறை குறைந்தது 25 முதல் 28 வரையான தொகுதிகளை இழக்கும் என்று கூறப்படுகிறது.

அதைப்போலத்தான் உத்தரப்பிரதேசத்திலும் பாஜக இந்த முறை மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்கள். கிட்டத்தட்ட 40 தொகுதிகளை பாஜக இழக்கும் என்கிறார்கள்.
குறிப்பாக உபியில் பாஜகவினர் சரியாகத் தேர்தல் வேலைகளையே செய்யவில்லை என்றும் சொல்லப் படுகிறது. ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பாஜகவுக்குத் தேர்தல் வேலை பார்க்கவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே உபியில் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளது. உபியில் ஒரு 40 சீட்டு மகாராட்டிராவில் ஒரு 25 சீட்டு என ஆக மொத்தம் 65 சீட்டுகளை பாஜக இந்தத் தேர்தலில் இழக்கக் கூடும் எனச் சொல்லப்படுகின்றது.

பாஜக போட்டியில் 420 சீட்டுகளில் இந்த 65 சீட்டு களைக் கழித்துவிட்டால், 355 சீட்டுகள்தான் உள்ளன. அப்படிப் பார்த்தால் 400 சீட்டுகள் என்ற பாஜகவின் முழக்கம் இதிலேயே அடிபட்டுப் போய்விடுகிறது.
அடுத்து ’இந்தியா’ கூட்டணி. இந்தக் கூட்டணியுள்ள கட்சிகளில் அதிக இடங்களில் போட்டிப் போடுகின்ற கட்சி காங்கிரஸ்தான். திமுகவோ அல்லது ஆம் ஆத்மியோ இல்லை. மம்தாவின் திரிணாமுல் காங்கிரசோ அதிக இடங்களில் போட்டியிடவில்லை. அதே போலத் தான் அகிலேஷ் யாதவும், தேஜஸ்வி சூர்யா ஆகிய இருவரும்.
மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா வுக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கோ யாருக்குமே 50 சீட்டுகள் கிடைக்கப்போவதில்லை. காரணம், இவர்கள் போட்டியிடுவதே குறைவான இடங்களில்தான். எப்படிப் பார்த்தாலும் இந்தியா கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்.
இது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். 5 ஆம் கட்டத் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்பது குறித்து ஷ்யாம் பேசுகையில், “இந்த 5 ஆம் கட்டத்தேர்தலில் மொத்தம் 49 தொகுதி களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2019இல் இதே தொகுதிகளில் நடைபெற்ற 5 ஆம் கட்டத் தேர்தலில் பாஜக மொத்தம் 39 தொகுதிகளை வென்றது. இந்த முறை கட்டாயம் 10 தொகுதிகள் வரை குறையலாம். பலரது கணிப்பு அதுவாகவே உள்ளது.
அப்படிப் பார்த்தால் 29 தொகுதிகளில் வெல்வதற்கான வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது. மீதம் உள்ள 20 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்குக் கிடைக்கும் என்றும் கணிக்கிறேன்.
கடந்த 2019இல் பாஜக மொத்தம் 303 இடங்களில் வென்றது. அப்படிப் பார்த்தால் இந்த முறை முன்பு வெற்றி பெற்ற இடங்களில் மீண்டும் கைப்பற்ற முடியுமா? அப்படிக் கைப்பற்ற முடியாவிட்டால், அதை ஈடுகட்ட வேறு புதிய இடங்களில் வென்று அதைச் சமன் செய்ய முடியுமா? இதான் நாம் விடை தேட வேண்டிய கேள்வி.

தேர்தல் காலங்களில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பலரும் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடுவார்கள். இது கிரிக்கெட் உலகில் கூட உண்டு. தேர்தல் காலங்களில் இது அரசியலிலும் நடக்கும்.
இப்படி பெட் கட்டி சூதாடுவது சட்டப்படி குற்றம். ஆனாலும் கள்ளச்சந்தையில் ஆன்லைனில் நடப்பதால் அரசு முழுமையாக அதைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இதில் பணம் கட்டி விளையாடுபவர்கள் மிகத் திறமையாகச் செயல்படுவார்கள்.
அதன்படிப் பார்த்தால், முன்பே பாஜக ஆட்சிக்கு வரும் எனப் பணம் கட்டி ஆடிவந்தவர்கள்தான் அதிகம் இருந்தனர். ஆனால், 5 ஆம் கட்டத்தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வராது என்று பெட் கட்டி ஆடுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அதே சமயம் பாஜக வலிமையான எதிர்க்கட்சியாக வரும் என்று பலரும் உறுதியாகப் பணம் கட்டி ஆடு கிறார்கள். இவர்களின் முடிவுகள் பல தேர்தல்களில் அப்படியே நடந்துள்ளது.
ஆக, இன்றைய நிலவரப்படி பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்றே பணம் கட்டிவருகிறார்கள். இதை ஒரு தகவலாகச் சொல்கிறேன்.
பாஜக 420 இடங்களில் போட்டிப் போடுகிறது. இந்த எண்ணிக்கை மிக அதிகம். எப்படிப் பார்த்தாலும் 220 இடங்களில்தான் பாஜக வெற்றி பெறும். களச் செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன” என்கிறார்.

No comments:

Post a Comment