சண்டிகர், மே 9- 3 சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப் பெற்றதால், அரியானா அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தனது அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில், முதல மைச்சர் நயாப்சிங் சைனி தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள னர். பா.ஜனதாவுக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்களும், ஜன நாயக ஜனதா கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர் களும் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி கடந்த மார்ச் மாதம் திரும்பப் பெற்றது. அதையடுத்து, 6 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு டன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வருகிறது. மனோகர்லால் கட்டா ருக்கு பதிலாக, நயாப்சிங் சைனி முதலமைச்சராக பதவி ஏற்றார். இதற்கிடையே, சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தனர். இதனால், அரியானா பா.ஜனதா அரசுக்கு அறுதிப்பெரும் பான்மைக்கு 2 சட்டமன்ற உறுப் பினர்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். அதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. அது பதவியில் நீடிக்க உரிமை இல்லை. எனவே, மாநில அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்குமாறு அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதப் போகிறது. அதன்பிறகு புதிதாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். இதுபோல், ஜனநாயக ஜனதா, லோக்தளம், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பல்ராஜ் குண்டு ஆகியோரும் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு ஆளுநருக்கு கடிதம் எழுத வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், தனது அரசுக்கு சிக்கல் இல்லை என்று நயாப்சிங் சைனி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர் தல் பிரச்சாரத்துக்காக சிர்சாவுக்கு சென்ற அவர் அங்கு செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- மாநில அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அது வலிமையாக இயங்கு கிறது. அரசுக்கு சிக்கல் இருப்பது போல் காங்கிரஸ் கட்சி குழப்பத்தை உண்டாக்கி வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
நயாப்சிங் சைனி கடந்த மார்ச் 13-ஆம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் தயாராக இருப்பதாக மாநில பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment