பா.ஜ.க.விற்கு 100 தொகுதிகள்கூட கிடைக்காது!
பெங்களூரு, மே 10- 18ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடை பெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. 96 தொகுதி களுக்கு மே 13 அன்று நான்காம் கட்ட தேர்தல் நடை பெறவுள்ளது. இந்நிலையில், முத லிரண்டு கட்ட வாக்குப்பதிவில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவான சூழல் இருப்பதாக “கோடி மீடியா” தவிர்த்து பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் மோடி அரசின் உளவுத்துறையும் “இந்தியா” கூட்டணிக்கு சாதகமான சூழல் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளதால், பாஜகவினர் மிரண்டு போயுள்ளனர்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பாகிஸ்தான், ராமன் கோவில், இந்து – முஸ் லிம் மக்களிடையே வன்முறையை கிளப்பும் வெறுப்புப் பேச்சு, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை குறிவைத்து பொய்ச் செய்திகள் உள்ளிட்டவை மூலம் இழிவான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மோடி உள்ளிட்ட பாஜகவினரின் நச்சு பேச் சுக்கள் புளித்துப் போய் விட்டதால் மக்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் கூட வாக்குப் பதிவு மிக மோசமான அளவில் குறைந் துள்ளது.
பாஜகவிற்கு பலத்த அடி
தமிழ்நாடு, கேரளா, அசாம், கருநாடகா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழுமையாகவும், ஒரு சில மாநிலங்களில் 40% தொகுதிகளுக்கும் மூன் றாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இந்த மூன்று கட்ட மக்களவை தேர்தல் தொடர்பாக கிரவுண்ட் ஜீரோ மற்றும் புலனாய்வு ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட ஆய்வுகள் மூலம் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி யாகியுள்ளன. அதில் மூன்று கட்ட தேர்த லிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற 283 தொகு திகளில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி 188 தொகு திகளில் ஆதிக்கம் செலுத்தும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளுங்கட்சி 100 தொகுதிகளைத் தொடுவதே சிரமம் என கூறப்பட்டுள்ளது. மூன்று கட்டத் தேர்தலில் பாஜக 95 தொகுதிகளை மட்டுமே கைப் பற்றும் என கூறப்பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளால் பாஜகவினர் அதிர்ச்சி யில் உறைந்துள்ளனர்.
கருநாடகாவில் பாஜகவிற்கு
5 தொகுதிகள் கூட கிடைக்காது
தென்னிந்தியாவிலும் நாங்கள் இருக்கி றோம் என்று கூறிக் கொள்ளும் அளவிற்கு வலுவாக உள்ள கருநாடகாவில், மக்கள வைத் தேர்தல் மூலம் பாஜகவிற்கு பலத்த அடி கிடைக்கும் என கிரவுண்ட் ஜீரோ கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. கருநாடகாவில் மொத்த முள்ள 28 தொகுதிகளில் 14+14 என்ற அளவில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், கருநாடகாவில் மொத்த முள்ள 28 தொகுதிகளில் எந்தத் கூட்ட ணிக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் என பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான கிர வுண்ட் ஜீரோ நிறுவனம் தங்களது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளையும், பாஜக 4 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் கூடுதல் சேதாரத்தை உருவாக்கும்
கருநாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (ஜேடிஎஸ்) கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டுள்ளது பாஜக. இத்தகைய சூழலில் கருநாடகாவில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நாளான ஏப்ரல் 26-க்கு முந்தைய நாளான ஏப்ரல் 25 அன்று ஜேடிஎஸ் கட்சியின் பிரிஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்குற்றங் கள் சம்பவம் (300 பெண்கள் – 3000 ஆபாச காட்சிப் பதிவுகள்) கசிந்தது. இந்த நிகழ்வால் மக்களவை தேர்தலில் பாஜக – ஜேடிஎஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளதால், பிரஜ்வல் ரேவண்ணா விவ காரத்தால் பாஜக கூடுதல் சேதாரத்தை சந் திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment