கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை யாக்குவோம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஒவ்வொரு இளைஞனுக்கும் வேலை உறுதி, ராகுல் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது, புதின் மற்றும் ஷேக் ஹசீனா செய்ததை மோடி செய்ய முயற்சிக்கிறார் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
* 22 பெரும் பணக்காரர்களின் 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார், விவசாயிகளை புறக்கணித்தார்: இமாச்சல் பிரதே சத்தில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கண்டனம்.

* பொய்களை பேசி, பொய்யான வாக்குறுதி தரும் பாஜக, பொருளாதாரம் வேகமாக வளருகிறதென்றால் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? மோடிக்கு பிரியங்கா கேள்வி

தி இந்து

* இமாச்சலப் பிரதேசம் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு போட்டி கடுமையாக உள்ளது.

தி டெலிகிராப்

* மோடி மீண்டும் ’முதலமைச்சர்’ ஆகட்டும்: பீகார் பேரணியில் நிதிஷ் குமார் பேச்சு – வாய் தவறி சொல்லி விட்டதாக சமாளிப்பு.
* பீகாரில், பாஜகவின் நிலைப்பாடு, அக்கூட்ட ணியின் வெற்றியை பெரிதும் பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment