2.73 இலட்சம் சந்தாதாரர்களை புதிதாக சேர்த்திருக்கும் ஜியோ - டிராய் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

2.73 இலட்சம் சந்தாதாரர்களை புதிதாக சேர்த்திருக்கும் ஜியோ - டிராய் அறிக்கை

சென்னை, மே 11- தமிழ்நாட்டில் மிகப்பெரிய, அதிவேகமாக மற்றும் மாபெரும் 4ஜி மற்றும் ட்ரூ 5ஜி வலையமைப்பைக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டில் 2.73 இலட்சத்திற்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களை தனது வலையமைப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தால் (ஜிஸிகிமி), சமீபத்தில் வெளியிடப்பட்ட தொலைத் தொடர் புக்கான தரவு அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டி ருக்கிறது. ஜியோவின் அதிக நம்பகமான, சிறப்பான மற்றும் வலுவான வலையமைப்பு, தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனாளிகள் விரும்பி தேர்வு செய்யும் முதல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது;

தமிழ்நாட்டில் 16,900 க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய 313 தாலுகாக்கள் மற்றும் 38 மாவட்டங்கள் அனைத்தையும் ஜியோவின் வலையமைப்பு இணைத்திருக் கிறது. கூடுதலாக, புதுச்சேரி யூனியன் பிரதேசமும் (ஹிஜி) இந்த வலையமைப்பின் கீழ் சேவையைப் பெறுகிறது. இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து முன்னணி நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், மால்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங் கள், அவைகள் விரும்பி பயன்படுத்தும் டிஜிட்டல் பார்ட்னராக ஜியோவை தேர்வு செய்திருக்கின்றன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment