காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷியாபாத் போன்ற நகரங்களை‘புனித' இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை மாற்றும் அறைகளில் இரகசிய காமி ராக்கள் வைத்துள்ள சாமியார்கள்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆபாச சாமியார்கள்மீது எந்தவித நடவடிக்கையும் உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் எடுக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவில் மிகவும் பிரபலமானது, அதன் தலைமை பூசாரி உள்ளூர் தொலைக் காட்சியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார், இவர் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று சிறப்பு சொற் பொழிவு ஆற்றுவார். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ஹிந்து குடும்பத்தினர் பரிகாரத்திற்காக இந்தியா வில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூசைகள் செய்து வருகின்றனர். குளியலறையில் காமிரா! உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவிலுக்கும் அவர்கள் வந்துள் ளனர். கோவில் வளாகத்தில் தங்கிய அவர்களோடு வந்த பெண்கள் குளிக்கச்சென்றபோது வித்தியாச மான பொருள் ஒன்று சுவரில் மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டனர். முதலில் என்ன என்று தெரியாதவர்கள், ஆண்களை அழைத்து பார்க்கச் சொன்னபோது அது ‘‘புளுடூத் பொருத்தப்பட்ட காமிரா'' என்று தெரிந்துகொண்டனர். பின்னர் அருகில் உள்ள குளியல் அறை களையும் சோதனை செய்த போது, அங்கும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கூறிய போது, அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத் திருப்பார்கள்; நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியதோடு, அவர்களை அங்கிருந்துச் செல்லு மாறும் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்களோ இது தொடர்பாக கங்கா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைமைப் பூசாரியின் யோக்கியதை! இதனை அடுத்து காவலர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை செய்த போது, தலைமைப் பூசாரியும், சொற்பொழிவாளருமான முகேஷ் கோஸ்சுவாமியின் லாப்டாப்பில் அனைத்து காமிராக்களின் புளூடூத் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது, இந்த நிலையில் முகேஷ் கோஸ்சுவாமி லக்னோ சென்று விட்டார். அவரது லாப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆடை களற்ற காணொலிகள், குளிலறையில் குளிப்பது, கழிப்பறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காணொலிகள் இருந்தன. அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வந்த பெண்கள் ஆவர். தெற்கு அரித்துவார் என்று அழைக்கப்படும் கங்கா நகருக்கு அரித்துவாருக்குச் சென்று தலைமுழுக விரும்புவர்கள் முதலில் இங்கு வந்து கங்கையில் குளித்துவிட்டுச் செல்வார்கள் நீண்ட நாள்களாகவே ரகசிய காமிராக்கள் பொருத்தி இந்த ஆபாசக் காணொலியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சாமியார் கோஸ்சுவாமி மீது ஏற்கெனவே இது போன்ற புகாரை பாவத்பூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். விசாரணையில் தாமதம்! ஆனால், காவலர்கள் ‘‘விசாரிக்கிறோம்'' என்று கூறிவிட்டு அத்தோடு வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் இந்த ஆபாசக் காட்சிப் பதிவிற்காக சாமி யாருக்கு உதவியாக இருந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் காணொலிகள் அயல்நாடுகளில் உள்ள ஆபாசக் காணொலிகளைப் பதிவேற்றும் இணையதளங் களுக்கு விற்பனை செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன மேலும் இவர் ஆபாசக் காணொ லிகளை எடுத்து மிரட்டி பணம் பிடுங்கும் நட வடிக்கையிலும் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக 15.06.2018 அன்று இவர் மீது புகார் உள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியூருக்குச் சென்றுள்ள சாமியார் முகேஷ் கோஸ்சுவாமியை காவல்நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை யினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கு தொடர் பான மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் மட் டுமே புகார் தெரிவித்துள்ளதாலும், வேறு யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் காவல்துறையினரும் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர். கிடப்பில் போட்டு விடுவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து குடும்பம் இன்னும் சில நாள்களில் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால், இந்த வழக்கு அப்படியே கிட்டப்பில் போடப்படும் என்று உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார். அதற்காகவே காவல்துறையும், சாமி யார் முகேஷை விரைந்து விசாரணைக்கு அழைக்காமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக காஷியாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் விவேக் சந்திரயாதவ் கூறியதாவது: சாமியார் முகேஷ் மீது ஏற்கெனவே இது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் அண்மையில் கோவிலின் வெளிப்பகுதியிலும், கங்கைக்கரையிலும், சட்ட விரோதமாக குளியல் அறைகளைக் கட்டியுள்ளார். அதில்தான் இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குளியலறைகளை இடிக்க நக ராட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளி சாமியார் தற்போது இங்கு இல்லை; அவரைப் பிடிக்க இரண்டு குழு அமைத்துள்ளோம்; விரைவில் பிடி படுவார் என்று கூறினார். புகார் கொடுத்த பெண் கள் குறித்து விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘மர்ம'மான மரணம் 2018 ஆம் ஆண்டு சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை நதியில் ‘மர்ம'மான முறையில் இறந்ததுள்ளனர். இந்த விவகாரத்திலும் முகேஷ் கோஸ்சுவாமி பெயர் வந்தது. அப்போது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராக நந்துகிஷோர் குஜார் என்பவர் சாமியார் முகேஷ் கோஸ்சுவாமி காணொலிகளை எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது தொடர்பாக புகார் அளித்தபோது, சான்றுகள் எதுவும் இல்லாததால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது தற்போது மீண்டும் இவர் மீது புகார் எழுந்துள் ளது. இவர் மதுரா நகரில் முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று கூட்டமாக தொழுகை நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லா மல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்று இஸ்லா மியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். இவரின் புகாரை ஏற்று, சாலைகளில் தொழுகை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது. அருவருப்பான லீலைகள் பெண்களின் குளியல் அறையில் ரகசிய காமிராக்கள்! வழக்கு விசாரணைகளைக் கிடப்பில் போடும் பி.ஜே.பி. ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷியாபாத் போன்ற நகரங்களை‘புனித' இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை மாற்றும் அறைகளில் இரகசிய காமி ராக்கள் வைத்துள்ள சாமியார்கள்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆபாச சாமியார்கள்மீது எந்தவித நடவடிக்கையும் உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் எடுக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவில் மிகவும் பிரபலமானது, அதன் தலைமை பூசாரி உள்ளூர் தொலைக் காட்சியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார், இவர் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று சிறப்பு சொற் பொழிவு ஆற்றுவார். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ஹிந்து குடும்பத்தினர் பரிகாரத்திற்காக இந்தியா வில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூசைகள் செய்து வருகின்றனர். குளியலறையில் காமிரா! உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவிலுக்கும் அவர்கள் வந்துள் ளனர். கோவில் வளாகத்தில் தங்கிய அவர்களோடு வந்த பெண்கள் குளிக்கச்சென்றபோது வித்தியாச மான பொருள் ஒன்று சுவரில் மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டனர். முதலில் என்ன என்று தெரியாதவர்கள், ஆண்களை அழைத்து பார்க்கச் சொன்னபோது அது ‘‘புளுடூத் பொருத்தப்பட்ட காமிரா'' என்று தெரிந்துகொண்டனர். பின்னர் அருகில் உள்ள குளியல் அறை களையும் சோதனை செய்த போது, அங்கும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கூறிய போது, அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத் திருப்பார்கள்; நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியதோடு, அவர்களை அங்கிருந்துச் செல்லு மாறும் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்களோ இது தொடர்பாக கங்கா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைமைப் பூசாரியின் யோக்கியதை! இதனை அடுத்து காவலர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை செய்த போது, தலைமைப் பூசாரியும், சொற்பொழிவாளருமான முகேஷ் கோஸ்சுவாமியின் லாப்டாப்பில் அனைத்து காமிராக்களின் புளூடூத் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது, இந்த நிலையில் முகேஷ் கோஸ்சுவாமி லக்னோ சென்று விட்டார். அவரது லாப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆடை களற்ற காணொலிகள், குளிலறையில் குளிப்பது, கழிப்பறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காணொலிகள் இருந்தன. அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வந்த பெண்கள் ஆவர். தெற்கு அரித்துவார் என்று அழைக்கப்படும் கங்கா நகருக்கு அரித்துவாருக்குச் சென்று தலைமுழுக விரும்புவர்கள் முதலில் இங்கு வந்து கங்கையில் குளித்துவிட்டுச் செல்வார்கள் நீண்ட நாள்களாகவே ரகசிய காமிராக்கள் பொருத்தி இந்த ஆபாசக் காணொலியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சாமியார் கோஸ்சுவாமி மீது ஏற்கெனவே இது போன்ற புகாரை பாவத்பூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். விசாரணையில் தாமதம்! ஆனால், காவலர்கள் ‘‘விசாரிக்கிறோம்'' என்று கூறிவிட்டு அத்தோடு வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் இந்த ஆபாசக் காட்சிப் பதிவிற்காக சாமி யாருக்கு உதவியாக இருந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் காணொலிகள் அயல்நாடுகளில் உள்ள ஆபாசக் காணொலிகளைப் பதிவேற்றும் இணையதளங் களுக்கு விற்பனை செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன மேலும் இவர் ஆபாசக் காணொ லிகளை எடுத்து மிரட்டி பணம் பிடுங்கும் நட வடிக்கையிலும் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக 15.06.2018 அன்று இவர் மீது புகார் உள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியூருக்குச் சென்றுள்ள சாமியார் முகேஷ் கோஸ்சுவாமியை காவல்நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை யினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கு தொடர் பான மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் மட் டுமே புகார் தெரிவித்துள்ளதாலும், வேறு யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் காவல்துறையினரும் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர். கிடப்பில் போட்டு விடுவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து குடும்பம் இன்னும் சில நாள்களில் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால், இந்த வழக்கு அப்படியே கிட்டப்பில் போடப்படும் என்று உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார். அதற்காகவே காவல்துறையும், சாமி யார் முகேஷை விரைந்து விசாரணைக்கு அழைக்காமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக காஷியாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் விவேக் சந்திரயாதவ் கூறியதாவது: சாமியார் முகேஷ் மீது ஏற்கெனவே இது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் அண்மையில் கோவிலின் வெளிப்பகுதியிலும், கங்கைக்கரையிலும், சட்ட விரோதமாக குளியல் அறைகளைக் கட்டியுள்ளார். அதில்தான் இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குளியலறைகளை இடிக்க நக ராட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளி சாமியார் தற்போது இங்கு இல்லை; அவரைப் பிடிக்க இரண்டு குழு அமைத்துள்ளோம்; விரைவில் பிடி படுவார் என்று கூறினார். புகார் கொடுத்த பெண் கள் குறித்து விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘மர்ம'மான மரணம் 2018 ஆம் ஆண்டு சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை நதியில் ‘மர்ம'மான முறையில் இறந்ததுள்ளனர். இந்த விவகாரத்திலும் முகேஷ் கோஸ்சுவாமி பெயர் வந்தது. அப்போது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராக நந்துகிஷோர் குஜார் என்பவர் சாமியார் முகேஷ் கோஸ்சுவாமி காணொலிகளை எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது தொடர்பாக புகார் அளித்தபோது, சான்றுகள் எதுவும் இல்லாததால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது தற்போது மீண்டும் இவர் மீது புகார் எழுந்துள் ளது. இவர் மதுரா நகரில் முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று கூட்டமாக தொழுகை நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லா மல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்று இஸ்லா மியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். இவரின் புகாரை ஏற்று, சாலைகளில் தொழுகை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது. அருவருப்பான லீலைகள் பெண்களின் குளியல் அறையில் ரகசிய காமிராக்கள்! வழக்கு விசாரணைகளைக் கிடப்பில் போடும் பி.ஜே.பி. ஆட்சி!

காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷி யாபாத் போன்ற நகரங்களை‘புனித’ இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை மாற்றும் அறைகளில் இரகசிய காமி ராக்கள் வைத்துள்ள சாமியார்கள்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆபாச சாமியார்கள்மீது எந்தவித நடவடிக்கையும் உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் எடுக்கப்படவில்லை.
உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவில் மிகவும் பிரபலமானது, அதன் தலைமை பூசாரி உள்ளூர் தொலைக் காட்சியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார், இவர் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று சிறப்பு சொற் பொழிவு ஆற்றுவார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ஹிந்து குடும்பத்தினர் பரிகாரத்திற்காக இந்தியா வில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூசைகள் செய்து வருகின்றனர்.

குளியலறையில் காமிரா!
உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவிலுக்கும் அவர்கள் வந்துள் ளனர். கோவில் வளாகத்தில் தங்கிய அவர்களோடு வந்த பெண்கள் குளிக்கச்சென்றபோது வித்தியாச மான பொருள் ஒன்று சுவரில் மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டனர். முதலில் என்ன என்று தெரியாதவர்கள், ஆண்களை அழைத்து பார்க்கச் சொன்னபோது அது ‘‘புளுடூத் பொருத்தப்பட்ட காமிரா” என்று தெரிந்துகொண்டனர்.
பின்னர் அருகில் உள்ள குளியல் அறை களையும் சோதனை செய்த போது, அங்கும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டனர்.
உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கூறிய போது, அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத் திருப்பார்கள்; நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியதோடு, அவர்களை அங்கிருந்துச் செல்லு மாறும் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், அவர்களோ இது தொடர்பாக கங்கா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தலைமைப் பூசாரியின் யோக்கியதை!
இதனை அடுத்து காவலர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை செய்த போது, தலைமைப் பூசாரியும், சொற்பொழிவாளருமான முகேஷ் கோஸ்சுவாமியின் லாப்டாப்பில் அனைத்து காமிராக்களின் புளூடூத் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது,
இந்த நிலையில் முகேஷ் கோஸ்சுவாமி லக்னோ சென்று விட்டார். அவரது லாப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆடை களற்ற காணொலிகள், குளிலறையில் குளிப்பது, கழிப்பறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காணொலிகள் இருந்தன.
அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வந்த பெண்கள் ஆவர். தெற்கு அரித்துவார் என்று அழைக்கப்படும் கங்கா நகருக்கு அரித்துவாருக்குச் சென்று தலைமுழுக விரும்புவர்கள் முதலில் இங்கு வந்து கங்கையில் குளித்துவிட்டுச் செல்வார்கள்
நீண்ட நாள்களாகவே ரகசிய காமிராக்கள் பொருத்தி இந்த ஆபாசக் காணொலியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சாமியார் கோஸ்சுவாமி மீது ஏற்கெனவே இது போன்ற புகாரை பாவத்பூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர்.

விசாரணையில் தாமதம்!
ஆனால், காவலர்கள் ‘‘விசாரிக்கிறோம்” என்று கூறிவிட்டு அத்தோடு வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்
இந்த ஆபாசக் காட்சிப் பதிவிற்காக சாமி யாருக்கு உதவியாக இருந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் காணொலிகள் அயல்நாடுகளில் உள்ள ஆபாசக் காணொலிகளைப் பதிவேற்றும் இணையதளங் களுக்கு விற்பனை செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன மேலும் இவர் ஆபாசக் காணொ லிகளை எடுத்து மிரட்டி பணம் பிடுங்கும் நட வடிக்கையிலும் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக 15.06.2018 அன்று இவர் மீது புகார் உள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியூருக்குச் சென்றுள்ள சாமியார் முகேஷ் கோஸ்சுவாமியை காவல்நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கு தொடர் பான மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் மட் டுமே புகார் தெரிவித்துள்ளதாலும், வேறு யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் காவல்துறையினரும் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர்.

கிடப்பில் போட்டு விடுவர்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து குடும்பம் இன்னும் சில நாள்களில் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால், இந்த வழக்கு அப்படியே கிட்டப்பில் போடப்படும் என்று உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார். அதற்காகவே காவல்துறையும், சாமி யார் முகேஷை விரைந்து விசாரணைக்கு அழைக்காமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக காஷியாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் விவேக் சந்திரயாதவ் கூறியதாவது:
சாமியார் முகேஷ் மீது ஏற்கெனவே இது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் அண்மையில் கோவிலின் வெளிப்பகுதியிலும், கங்கைக்கரையிலும், சட்ட விரோதமாக குளியல் அறைகளைக் கட்டியுள்ளார். அதில்தான் இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குளியலறைகளை இடிக்க நக ராட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளி சாமியார் தற்போது இங்கு இல்லை; அவரைப் பிடிக்க இரண்டு குழு அமைத்துள்ளோம்; விரைவில் பிடி படுவார் என்று கூறினார். புகார் கொடுத்த பெண் கள் குறித்து விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

‘மர்ம’மான மரணம்
2018 ஆம் ஆண்டு சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை நதியில் ‘மர்ம’மான முறையில் இறந்ததுள்ளனர். இந்த விவகாரத்திலும் முகேஷ் கோஸ்சுவாமி பெயர் வந்தது. அப்போது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராக நந்துகிஷோர் குஜார் என்பவர் சாமியார் முகேஷ் கோஸ்சுவாமி காணொலிகளை எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது தொடர்பாக புகார் அளித்தபோது, சான்றுகள் எதுவும் இல்லாததால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது தற்போது மீண்டும் இவர் மீது புகார் எழுந்துள் ளது.
இவர் மதுரா நகரில் முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று கூட்டமாக தொழுகை நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லா மல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்று இஸ்லா மியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். இவரின் புகாரை ஏற்று, சாலைகளில் தொழுகை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment