'கடவுளால்' அனுப்பப்பட்டவர் 22 பேருக்கு மட்டுமே வேலை செய்கிறார் ராகுல் காந்தி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

'கடவுளால்' அனுப்பப்பட்டவர் 22 பேருக்கு மட்டுமே வேலை செய்கிறார் ராகுல் காந்தி சாடல்

featured image

புதுடில்லி,மே 24- ‘கடவுள்’ அனுப் பியதாக கூறும் பிரதமர் நரேந்திர மோடி 22 பேருக்கு மட்டுமே வேலை செய்து வருவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ஒடிசாவில் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் பயா லாஜிகளாகப் பிறந்திருக்க வாய்ப் பில்லை என்று நம்புவதாக நேற்று முன்தினம் (22.5.2024) தெரிவித் திருந்த நிலையில், ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நேற்று (23.5.2024) மாலையுடன் பிரசாரம் நிறைவுபெற்றது. இந்த நிலையில், புதுடில்லியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து ராகுல்காந்தி நேற்று (23.5.2024) பிரச்சாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

“நமது நாட்டின் ஆயிரக்கணக் கான ஆண்டுகள் பழைமை வாய்ந்த சித்தாந்தத்தையும் சிந்தனையையும் நமது அரசமைப்பு பிரதிபலிக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தை அழிப்பதாக பாஜக கூறுகிறது. கனவு காண வேண்டாம், உங்க ளால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன் கோடிக்கணக்கான மக்களுடன் காங்கிரஸ் நின்று கொண்டுள்ளது, நாட்டின் அரச மைப்பை யாராலும் அழிக்க முடியாது. இடஒதுக்கீட்டை முடி வுக்கு வரவுள்ளதாக பாஜக – ஆர்எஸ்எஸ் பேசிக் கொண்டிருக் கிறது. ஆனால், நாங்கள் இடஒதுக் கீட்டுக்கான 50 சதவிகித வரம்பை நீக்கி, அதனை 50 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்துவோம்.

தன்னை கடவுள் அனுப்பியதாக மோடி கூறுகிறார். கரோனா காலகட்டத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது, கைப் பேசியில் டார்ச் அடிக்கச் சொன் னார். கடவுள் எப்படிப்பட்ட மனி தரை அனுப்பியுள்ளார்? நாட்டில் வெறும் 22 பேருக்கு மட்டுமே கடவுளால் அனுப்பப்பட்டவர் வேலை செய்கிறார். நாட்டின் ரயில் நிலையம், விமான நிலையம், துறைமுகங்கள் என அனைத்து சொத்துகளையும் அதானிக்கு அளித்துவிட்டார். அதே சமயம், ஒரு ஏழை கடன் தள்ளுபடி, சாலைகள், மருத்துவமனைகள், கல்வி என எது கேட்டாலும் மோடிக்கு அது முக்கியமில்லை. பெரும் முதலாளிகளுக்கு மோடி அளித்த பணத்தை கொண்டு துபை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளார். ஆனால், நாங்கள் ஏழைகளுக்கு பணம் கொடுத்தால், நீங்கள் சட்டை, பேண்ட் வாங்குவீர்கள்.
இதையெல்லாம் நீங்கள் வாங் கத் தொடங்கும் போதே, இந்தியா வில் மூடப்பட்ட தொழிற் சாலைகள் மீண்டும் தொடங்கப் படும். அதே தொழிற்சாலைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment