சென்னை, மே 12– தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 280 பேர் உடலுறுப்பு கொடை வழங்கப்பட் டதைத் தொடர்ந்து, 1,595 பேருக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள் ளனர். முதலமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு உடலுறுப்பு கொடையளித்த 159 பேருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் (10.-5.-2024) சோழிங்கநல்லூ ரில் நீர்மோர் பந்தலை திறந்துவைத்த போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் அறிவுறுத்தலின்படி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து இடங்களிலும், அனைத்து வட்டங்களிலும் நீர் மோர் திறந்து பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோர், தண்ணீர், இளநீர், நுங்கு போன்ற கடும் வெயில் உபாதைகளைத் தணிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் பகுதியிலும், கந்தன் சாவடி பகுதியிலும், கொட்டிவாக்கம், கடற்கரைச் சாலை போன்ற நான்கு இடங்களிலும் நீர், மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பந்தல்களிலும் தர்பூசணி, கிர்ணி பழங்கள், மோர், ரோஸ்மில்க், நுங்கு, இளநீர் போன்ற வெயிலைத் தணிக்கக்கூடிய உபயோகரமானப் பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இதேபோல் தென்சென்னை யில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல்கள் இயங்கி வருகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணியினர் இதுபோல் பொதுமக்களுக்கு வெயிலைத் தணிக்கக்கூடிய வகையில் நீர்மோர் பந்தல்களைத் திறந்து சேவையாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த வகையில் தி.மு.கழகத்தின் சார்பில் பகுதி கழகமும், இளைஞர் அணியினரும் ஒருங்கி ணைந்து இன்றைக்கு இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்துகொண்டி ருக்கிறார்கள்.
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு கொடையளித்தவர்களுக்கு அரசு மரியாதை!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு 23.9.2023 அன்று தேதி இந்தியாவில் இருக்கிற மனிதநேயர்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் ஓர் அறிவிப்பினைவெளியிட்டார். அந்த அறிவிப்பானது, உடல் உறுப்பு கொடை செய்வது என்பதாகும். இறந்துபோனவர்கள், குறிப்பாக மூளைச் சாவு அடைந்தவர்கள் தங்களுடைய உடலுறுப்புகள் கொடை அளிக்கிற வகையில் அவரது உற்றார் உறவினர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் உடலுறுப்பு கொடை அளித்தவருடைய உடலுக்கு, மூளைச்சாவு அடைந்தவருடைய உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்கின்ற அறிவிப்பை அறிவித்தார்கள். அவரது அறிவிப்பினை இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுமக்களே முன்வந்துஉடல் உறுப்பு கொடை!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டதற்குப் பிறகு, செப்டம்பர் 23ஆம் தேதிக்குப் பிறகு (2023) பொதுமக்கள் ஆர்வம் கொண்டு மூளைச்சாவு அடைந்தவரு டைய உடலுறுப்புகளை கொடை யளிக்க முன்வந்து கொடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டைப் பொறுத்த வரை இதுவரை 178 பேர் உடலுறுப்பு கொடை அளித்திருக்கிறார்கள். 178 பேர் உடலிலிருந்து 1000 உடலுறுப்புகள் கொடை பெறப்பட்டு 1000 பேர் பயன டைகிற வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டி ருக்கின்றன. கடந்த 2022ஆம் ஆண் டைப் பொறுத்தவரை இந்திய அளவில் உடலுறுப்பு கொடை செய்வதிலும், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை களிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்தது. அதற்காக ஙிமீst ஷிtணீtமீ கிஷ்ணீக்ஷீபீ ஒன்றைத் தந்தார்கள். அந்த ஆண்டு உடலுறுப்பு கொடை செய்தவர்களின் எண்ணிக்கை 156. ஆனால் அதற்கடுத்த ஆண்டு அதையும் கடந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்குப் பிறகு 178 மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலி லிருந்து உடலுறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, ஆயிரம் உடலுறுப்புகள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டி ருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்டது!
அதைவிட இந்தாண்டு 2024 இந் நாள்வரை 130 நாட்களில் 102 மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலு றுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள் ளது. கடந்தாண்டு முழுவதும் 178 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந் தும், அதற்கு முந்தைய ஆண்டு 156. இந் தாண்டு 130 நாட்களில் 102 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலுறுப் புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இதுவரை 159 மூளைச்சாவு அடைந்த வர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களால் தொடங்கப்பட்ட உடலுறுப்பு கொடை பற்றிய விழிப்புணர்வும், ஆணையமும் அதனால், தமிழ்நாடு இந்தியாவிலேயே தொடர்ந்து முதலி டத்தில் இருந்து வருகிறது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் மனிதநேயமிக்க நிகழ்வாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment