உரத்தநாடு, மே 9- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 05.5.2024 அன்று மாலை 6 மணியளவில் உரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற் றினார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்ர மணியன், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர்
அ.உத்திராபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர்
வே.இராஜவேல், மாநில கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன், நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன், நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமாரவேலு, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.ராஜதுரை, ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சசிகுமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ் ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றி னர். மாணவர் கழகத் தோழர் உ.நா.இனிய வன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஒன்றிய நகர பொறுப்பாளர் களுக்கு விடுதலை சந்தா சேர்க்கும் சந்தா புத்தகங்களை வழங்கினார், பெற்றுக் கொண்ட கழக பொறுப்பாளர்கள் தங் களது சந்தாக்களை மாவட்ட தலைவர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர்.
கூட்டத்தில், 24.03.2024 அன்று தஞ் சையில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான விடுதலை நாளேட்டிற்கு ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகரம் சார்பில்
200-க்கும் மேற்பட்ட விடுதலை சந்தாக் களை சேர்த்து வழங்குவது எனவும், சுயமரி யாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படடது.
கடைத் தெருவில் உடனடியாக சந் தாக்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட் டது காந்தி அரிசிக் கடை உரிமையாளர் விஜய், யுனிக்யூ மென்ஸ் வேர் உரி மையாளர் கார்த்திக், வீரமணி மளிகைக் கடை உரிமையாளர் அகிலன், கவின் மளிகை உரிமையாளர் செந்தில்குமார்- கலா ஆகியோர் சந்தாக்களை வழங்கினர்.
No comments:
Post a Comment