சென்னை மே 9- ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று (8.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த குருப்-2 பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 25.2.2023 அன்று நடத்தப்பட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப் பட்டது.
இந்நிலையில், நேர்முகத் தேர்வுஅல்லாத பதவிகளுக்கான (நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகள் தவிர) அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதிவரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது.
இதற்கான அழைப்பாணையை விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும்மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தெரிவிக்கப்படும்.கலந்தாய்வுக்கு அனு மதிக்கப்படும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நாளில் வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment