பதிவான ஓட்டுகள் விவரம் வெளியிடுவதில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் மீதான வழக்கில் 17ஆம் தேதி விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

பதிவான ஓட்டுகள் விவரம் வெளியிடுவதில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் மீதான வழக்கில் 17ஆம் தேதி விசாரணை

புதுடில்லி, மே 14- பதிவான ஓட்டு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவது குறித்த வழக்கை, 17ஆம் தேதி விசாரிக்கப் போவ தாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

மக்களவைக்கு ஏழு கட்ட மாக தேர்தல் நடக்கிறது. இது வரை நான்கு கட்டம் முடிந்துள் ளது. ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் நடந்த முதல் இரண்டு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டு விபரங்களை, 30ஆம் தேதிதான் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இது அநியாய தாமதம் என எதிர்க்கட்சிகள் கூறின. ஏன் இந்த தாமதம் என்றும் கேட்டன. தேர்தல் ஆணையம் பதில் கூறவில்லை.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு, காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார். ‘ஓட்டுப் பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் எத்தனை ஓட்டு, எத்தனை சதவீதம் என்பதை வெளியிடுவது வழக்கம். இந்த தேர்தலில், 11 நாள் தாண்டிய பின், தேர்தல் ஆணையம் தகவல் தருகிறது. அப்படி வெளியிட்ட தகவல்களிலும் முரண்பாடுகள் உள்ளன’ என கார்கே குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடியாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. ‘தேர்தலில் குழப்பம் உண்டாக்குகிறார் கார்கே. அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’ என அதில் ஆணையம் எச்சரித்தது.
அதை கார்கே கண்டித்தார். ‘தேர்தல் பற்றி மக்கள் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என ஒரு புறம் தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம், மக்களின் நியாயமான கேள்வியை எதி ரொலித்த கட்சியை, அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது’ என்றார்.
இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம், உச்சதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதன் மனுவில் கூறியதாவது:

தேர்தல் நாளன்றும், பின்னர் 30ஆம் தேதியும் ஆணையம் வெளியிட்ட ஓட்டு சதவீதங்க ளில், 5 சதவீதத்துக்கு மேல் வித் தியாசம் வருகிறது.
இது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. தொகுதி வாரியான, மாநிலம் வாரியான தகவலையும் ஆணையம் வெளியிடவில்லை.
இனி நடக்கும் அடுத்த கட்ட தேர்தல்களிலாவது, ஓட்டு சத வீதம் குறித்த தகவல்களை தாம தம் செய்யாமல், உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டுச் சாவடி வாரியாக இந்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படி செய்தால்தான், தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு மனுவில் கேட்டி ருந்தனர். நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, தீபங்கர் தத்தா அடங் கிய அமர்வில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பிரஷாந்த் பூஷண், நேகா ரதி ஆகியோர், ‘முக்கியமான மக்களவைத் தேர் தலில் பாதி தூரம் தாண்டிய நிலை யில், மீதமுள்ள ஓட்டுப் பதிவுக ளிலாவது தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்’ என் றனர்.
இன்னும் தேர்தல் முடியாத சூழலில், அவசர முக்கியத்துவம் கொடுத்து இந்த வழக்கை விசா ரிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 17ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment