கிருட்டினகிரி, மே 15- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 14.5.2024 காலை 11.00 மணியவில், கிருட் டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம் மையார் கூட்ட அரங்கில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் செ. பொன்முடி அனைவரையும் வர வேற்றுப் பேசினார். கூட்டத்தின் துவக்கத்தில் ஊற்றங்கரை ஒன் றியச் செயலாளர் செ.சிவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கூட் டத்திற்கு பொதுக்குழு உறுப் பினர் கா.மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச. கிருட்டினன், தொழி லாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்,
தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை. செயராமன் விடுதலை சந்தா சேர்ப்பின் நோக்கம் குறித்து களப்பணியை எளிமையாக செய்வது குறித்து விரிவாக எடுத்துக் கூறி சிறப் புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கையொப்பம் இட்டு அனுப்பி வைத்த கடிதத்தினை பெற்றுக் கொண்டு படித்து நெகிழ்ந்த நிகழ்வை விளக்கி விடுதலை சந்தா சேர்ப்பின் முக்கியத்துவத் தையும் விடுதலை நாளேட்டில் பல்வேறு தலைப்புகளில் வெளி வரும் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் புரட்சிகரமான கருத்து களை எடுத்துக் கூறி கருத்துரை யாற்றினார். கூட்டத்தில் விவ சாய அணி மாவட்டத் தலைவர் இல.ஆறுமுகம், மாவட்ட இளை ஞரணி தலைவர் சீனிமுத்து.இராஜேசன், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் வே. புகழேந்தி, கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ.இராசா, ஒன்றியத் தலைவர்கள் பருகூர் மே.மாரப்பன், காவேரிப்பட் டணம் பெ.செல்வம், மத்தூர் கி.முருகேசன், ஒன்றியச் செய லாளர் கிருட்டினகிரி கி.வேலன், வெப்பாலம்பட்டி மா.சரவணன், பி.டி. சின்னராசு, கிட்டப்பட்டி கே.பழனி, மாணவர் கழக பு.கு. மகிழன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொறுப்பாளர் களும் கலந்துக் கொண்டு கருத் துரையாற்றினர்.
இறுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் விடுதலை சந்தா புத்தகங்களை பெற்றுக் கொண்டு கீழ்க்கண்டவாறு சந்தாக்களை திரட்டி வழங்குவதாக அறிவித்துள்ள கழக நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் கோ.திரா விடமணி ஆண்டு சந்தா -10, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன்- ஆண்டு சந்தா -10 , மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் அரையாண்டு சந்தா -10, பொதுக்குழு உறுப் பினர் கா.மாணிக்கம் ஆண்டு சந்தா – 5, கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது – 5, செயலாளர் கி.வேலன்- 5, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் -5, செயலாளர் பெ.செல்வேந் திரன்- 5, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே. புகழேந்தி ஆண்டு சந்தா – 5, மத்தூர் ஒன் றியத்தில் மாநில ப.க.துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் – ஆண்டு சந்தா – 10, மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆண்டு சந்தா – 5, தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம் ஆண்டு சந்தா – 5, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன் ஆண்டு சந்தா – 5, செயலாளர் வி.திருமாறன் ஆண்டு சந்தா – 5, மாவட்ட மகளிரணி தலைவர் மு.இந்திரா காந்தி ஆண்டு சந்தா- 5, இ.ச.மணிமொழி ஆண்டு சந்தா – 5, சே.ஜானகிராமன் ஆண்டு சந்தா – 5, மு.செயரட்சகன் – 5, நா. சிலம்பரசன் – 5, ஊற்றங்கரை ஒன்றியத்தின் சார்பாக பொதுக் குழு உறுப்பினர் பழ.பிரபு ஆண்டு சந்தா – 10, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆண்டு சந்தா – 10, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் ஆண்டு சந்தா – 10, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசேசன் ஆண்டு சந்தா-10 உள்பட கிருட் டினகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் மொத்தம் 150- விடுதலை ஆண்டு சந்தாக்களை வசூல் செய்து வழங்குவது என மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளரிடம் விவசாய அணி மாவட்டத் தலைவர் இல. ஆறுமுகம் அரையாண்டு சந்தா ஒன்றும். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி யின் அன்பு மகன் பு.கு.மகிழன் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 473 – மதிப்பெண்கள் பெற்றதின் மகிழ்வாக விடுதலை ஒரு ஆண்டு சந்தாவும் வழங் கினர். மகிழனுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.செயராமன் பயனாடை அணி வித்து இனிப்பு ஊட்டி பாராட் டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதே போல் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள காவேரிப்பட்டணம் கழகத் தோழர்களின் பிள்ளை கள் பெ.செல்வம் மகள் கலைய ரசி, இல ஆறுமுகம் மகள் மணிக் கொடி ஆகியோருக்கும் வாழ்த் துகளை தெரிவித்தார். இயக்கத் தில் புதியதாக இணைத்துக் கொண்ட கிருட்டினகிரி கிட் டம் பட்டியை சேர்ந்த தோழர் கே.பழனிக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செய ராமன் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
மத்தூர் மு.வீரமணியை மாவட்ட பொறியாளர் அணித் தலைவராக தலைமைக் கழக அமைப்பாளர் அறிவித்தார்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மனங்கள்
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு, சமூகநீதி. சமத்துவம், பெண் உரிமை மீட்பு போர்வாளாக தினமும் வெளிவந்து கொண்டி ருக்கும் ஏடான விடுதலைக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் 150-சந்தாக்களை திரட்டி வழங்குவது என தீர் மானிக்கப்படுகிறது.
கிருட்டினகிரி மாவட்டத்தில் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா – குடிஅரசு நூற் றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திய காவேரிப்பட்டணம் ஒன்றிய, ஊற்றங்கரை ஒன்றியம் கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் இம் மாவட்ட கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
கிருட்டினகிரி மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் கிளைகழக வாரியாக மாவட்ட கழக நிர் வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகி கள் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இல்லந்தோறும் விடு தலை சந்தாக்களை திரட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment