பட்டுக்கோட்டை, மே 15- பட்டுக் கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 14.5.2024 மாலை 4 மணி அளவில் மதுக்கூர் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஜெயக்குமார் கூட்டத் திற்கு தலைமை ஏற்று இயக்க செயல்பாடுகள் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு விடுதலை சந்தா பர வலாக சேர்க்கப்பட வேண்டிய தன் அவசியம் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றி னார். மாவட்டத் தலைவர் பெ.வீரையன் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.
மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முத்து.துரை ராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரத்தினசபா பதி, மாவட்ட பகுத்தறிவாக்க கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் சொக்க நாவூர் சிவாஜி, மதுக்கூர் ஒன் றிய கழகத் தலைவர் புழவஞ்சி அண்ணாதுரை, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப் பாளர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி நகரத் தலைவர் சந்திரமோகன், படப்பைக்காடு ரஞ்சித்குமார், பெரம்பையன், மதுக்கூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன், சேதுபா சத்திர ஒன்றிய செயலாளர் சண்முகவேல், பட்டுக் கோட்டை ஒன்றிய தலைவர் வீரமணிஉள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று கருத் துரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் கருத்து ரையாற்றினார்.
பட்டுக்கோட்டை மாவட் டத் துணைச் செயலாளர் இரா காளிதாஸ் நன்றி கூறினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
24-.3.-2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர் மானிக்கப்படுகிறது
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்டு ஏடான விடுதலைக்கு பட்டுக் கோட்டை கழக மாவட்ட சார்பில் 150 விடுதலைச் சந் தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டுவிழா – குடிஅரசு ஏடு நூற்றாண்டுவிழா கூட்டங் களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
நாகை நாடாளுமன்ற உறுப் பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் செல்வராஜ் மதுக்கூர் வடக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் மாணிக்க. சந்திரன் துணைவியார் சரோஜா ஆகி யோர் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment