டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
➡️காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 30 லட்சம் வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள், இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பாஜக, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு எதிராக இளைஞர்கள் காங்கிரசை ஆதரிக்கும் மன நிலையில் உள்ளனர்.
➡️ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பானி வரி, அதானி வரி விதித்து விடுவார்கள், பிரியங்கா எச்சரிக்கை.
➡️ காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் அல்லது மல்லிகார்ஜூனா கார்கே, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார், என முன்னாள் நீதிபதிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து ராகுல் கடிதம்.
➡️தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங் களில் 60 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெல்லும், சசி தரூர் நம்பிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡️இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமான மகாராஷ்டிராவில், நாட்டின் மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் (9.23 கோடி), வேலைவாய்ப்பு, மராத்தா இடஒதுக்கீடு ஆகியவை முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡️ இந்தியா கூட்டணி, நாட்டின் தலைவிதியை மாற்றும், பிணையில் விடுதலையான பிறகு தனது முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு.
தி டெலிகிராப்:
➡️ பாலியல் வன்கொடுமை புகார்களை அடுத்து அவர் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது என்பதை மேற்கு வங்க மாநில ஆளுநர் பதில் அளிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி கேள்வி.
➡️பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பது குறித்து மேற்கு வங்க வாக்காளர் ஒருவரின் குமுறல்.
➡️இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ‘சட்டவிரோதமாக’ தொடுத்த வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே உறுதி
➡️பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் பேரணியின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமர் கோவில் பெயரில் வாக்கு கேட்டதாகவும், கூட்டத்தின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மத முழக்கத்தை எழுப்பியதாகவும் லோக் தந்த்ரா பச்சாவோ அபியான், தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment