திருவாரூர், மே 15- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் 13-.5.-2024 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட தலை வர் வீ. மோகன் தலைமையிலும் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மாநில இளைஞரணி செயலாளர் நாத் திக. பொன்முடி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற் றினர். முன்னதாக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட பகுத்த றிவாளர் கழக தலைவர் அரங்க. ஈவெரா. நகர செயலாளர் ப.ஆறுமுகம், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் மு.சரவ ணன் நன்னிலம் ஒன்றிய தலை வர் இரா.தனராஜ். குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன். திருவாரூர் ஒன்றிய தலைவர் கவுதமன். ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன். இரா .சிவக்குமார், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, ஒன்றிய இளை ஞர் அணி செயலாளர் நா.செல் வகுமார், மாவட்ட தொழி லாளர் அணி பொறுப்பாளர் நேரு, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கார்த்திகேயன். மாணவர் கழக தோழர் எஸ்.எஸ். கண்மணி ஆகியோர் பங்கேற்றனர்.
இரங்கல் தீர்மானம்: நாகை நாடாளுமன்ற உறுப்பினரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் சித்தமல்லி எம்.செல்வராஜ் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.
24-3-2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு ஏடான விடுதலைக்கு திரு வாரூர் கழக மாவட்ட சார்பில் 120 விடுதலைச் சந்தாக்களை அளிப்பது என்று இக்கூட்டம் தெரிவிக்கிறது,
சுயமரியாதை இயக்க நூற் றாண்டுவிழா- குடி அரசு ஏடு நூற்றாண்டு விழா கூட்டங் களை மாவட்டம் முழுவதும் பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500/461 மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ். கண்மணி மாவட்ட தலைவர் மோகன் பொன்னாடை போத்தி வாழ்த்துகளை தெரிவித்தார். இறுதியாக தோழர் தங்க கிருஷ்ணா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment