ரஷ்யாவில் மருத்துவம் - உயர்கல்வி பயில கல்விக் கண்காட்சி: தமிழ்நாட்டில் மே 11 முதல் 17ஆம் தேதி வரை நடக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

ரஷ்யாவில் மருத்துவம் - உயர்கல்வி பயில கல்விக் கண்காட்சி: தமிழ்நாட்டில் மே 11 முதல் 17ஆம் தேதி வரை நடக்கிறது

featured image

சென்னை, மே 9- ரஷ்யாவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, அந் நாட்டு பல்கலைக் கழகங்கள் சார்பில் ரஷ்ய உயர்கல்வித்துறை மற்றும் ஸ்டடி அப்ராட் எஜு கேஷனல் கன்சல்டன்ட் சேர்ந்து தமிழ்நாட்டில் கல்விக் கண் காட்சியை நடத்த உள்ளன.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (8.5.2024) நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச், ரஷ்ய கலாச்சார மய்ய இயக்குநர் அலெக்சாண்டர் டோடோநவ் ஆகியோர் அளித்த பேட்டி:

மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர் களுக்கு விருப்பமான நாடுகளில், ரஷ்யா முதன்மையாக உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பு களுக்கு ‘ஸ்பாட் அட்மிஷன்’ வழங்கப்படும்.எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான கல்விக் கட்டணம், ஆண்டொன் றுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

இந்திய மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பிற்கான இடங் கள் கடந்த ஆண்டுவரை 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. 2024-2025இல் இந்திய மாணவர்களுக்காக இடங்களை 8 ஆயிரமாக உயர்த்தி 30க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன.

இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத் திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத் துவக் கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விருப் பமான நாடுகளில், ரஷ்யா முதன்மையாக உள்ளது.

இந்த மருத்துவப் படிப்புக ளுக்கான ‘ஸ்பாட் அட்மிஷன்’, மே 11, 12 ஆகிய தேதிகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மய்யத்தில் நடக்கிறது. எம்.பி.பி.எஸ். மட்டு மல்லாது பொறியியல், தொழில் நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ‘ஸ்பாட் அட் மிஷன்’ வழங்கப்பட உள்ளது.

மே 14ஆம் தேதி மதுரை ரெசிடென்சி, மே 15ஆம் தேதி திருச்சி ஃபெமினா, மே 16ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப், மே 17ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டி போன்ற நட்சத்திர விடுதிகளிலும் கண் காட்சி நடைபெறும்.

கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் ஆண்டு உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப் படும்.
இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங் களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங் களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும்.
போர் காரணமாக மாணவர் களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற் படாது.

நாங்கள் போர் நடக்கும் இடத்தில் இருந்து 2 ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறோம்.
மாணவர்கள் பாதுகாப்பிற்கு முறையான ஏற்பாடுகளை அனைத்து பல்கலைக் கழகங் களும் ஏற்படுத்தியுள்ளன. இவ் வாறு கூறினர்.

No comments:

Post a Comment