இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி,மே14- உலகளவில் இணைய வழி (சைபர்) குற்றங்கள் அதிகம் நிக ழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள் ளதாக ஆய்வறிக்கை ஒன் றில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதில் முன்பணம் செலுத்தினால் அதிக பரி சுத்தொகை கிடைக்கும் என மக்களை ஏமாற்றும் மோசடிகளே இந்தியா வில் அதிகம் நடைபெறு வதாக குறிப்பிடப்பட்டுள் ளது.
உலகில் உள்ள 100 நாடுகளில் நடைபெறும் பல்வேறு வகையான இணைய வழிக் குற்றங் கள் தொடர்பான ‘உலக இணைய குற்ற குறியீடு’ என்ற ஆய்வறிக்கையை பன்னாட்டு அளவிலான ஆராய்ச்சிக் குழுவினர் வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் இணைய வழிக் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உக்ரைனும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா, வட கொரியா ஆகிய நாடுகளும் உள் ளன. 8-ஆவது இடத்தில் பிரிட்டனும் 9-ஆவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

‘மால்வேர்’, ‘ரேன்சம் வேர்’ போன்ற வைரஸ் பாதிப்புகளால் மேற் கொள்ளப்படும் குற்றங் கள், தரவுகள் திருடப் படுதல், கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்குக ளிலிருந்து இணைய வழியாக பணம் திருடப் படுதல், கட்டண மோசடி, பணப் பரிவர்த்தனை, எண்ம நாணயம் உள் ளிட்ட பல்வேறு வகை யான குற்றங்கள் குறித்து பல நாடுகளில் உள்ள நிபு ணர்களை கருத்து தெரி விக்குமாறு ஆராய்ச்சிக் குழுவினர் கேட்டிருந்த னர். அதனடிப்படையி லேயே இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான குற்றம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. புவியியல் ரீதியாக இக் குற்றங்கள் வகைப்படுத் தப்பட்டுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் தனிநபர் தரவுகள் திருடப்பட்டு மோசடியில் ஈடுபடும் குற்றங்கள் போன்ற தொழில்நுட்ப குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
இணைய வழியில் முன்பணம் செலுத்தி னால் அதிகப் பரிசுத்தொகை கிடைக்கும் என பொது மக்களை ஏமாற்றும் மோசடிகளே இந்தியா வில் அதிகம் நடைபெறு கிறது. அமெரிக்கா மற் றும் ருமேனியாவில் அதிக தொழில்நுட்பக் குற்றங் கள் மற்றும் குறைவான தொழில்நுட்பக் குற்றங் கள் ஆகிய இரு பிரிவுக ளிலும் குற்றங்கள் நடை பெறுகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விரு பிரிவுகளிலும் சரிசமமான அளவிலேயே குற் றங்கள் நடைபெறுகின்றன.

மூன்று ஆண்டுகளாக பல்வேறு நாடுகளிடமி ருந்து பெறப்பட்ட தரவு களை ஆராய்ந்து இந்த குறியீடு வெளியிடப் பட்டுள்ளது. பல்வேறு வகையான இணையக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள இந்தக் குறியீடு உதவும் என நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment