மதுரை, மே 12 மதுரை உசிலம்பட்டி அருகே கூலித் தொழி லாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித் துள்ளார்.
தமிழ்நாட்டில் பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 10.5.2024 அன்று காலை வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள் ளனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55% என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகி தம் சற்று அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளர்.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றும், மாண வர்கள் 88.58% என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரிய லூர் மாவட்டம் முதலிடம் பிடித் துள்ளது. தமிழ்நாட்டில் 3 மாணவிகள் 500க்கு 499 மதிபெண்கள் பெற்று மாநிலத் தில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
விவசாய கூலித் தொழிலாளி தந்தை, அங்கன் வாடியில் பணியாற்றும் தாய்க்கு மகளான சுஷ்யா, மிகவும் அக்கறையாகவும், கடின உழைப்பும் கொண்டு படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவர் படித்த பள்ளி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரி யர்கள், அப்பகுதி மக்கள் மாணவி சுஸ்யாவை பாராட்டி வருகின்றனர். தனது பெற்றோர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலமே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததாகவும், குடும்பத்தினரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே தனது கனவு என்றும் சுஸ்யா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment