டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஏழைகளை லட்சாதிபதிகளாக்குவோம், ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலகின் எந்த ஜனநாயகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பு நடத்தாத ஒரே பிரதமர் மோடிதான்’, சத்ருகன் சின்ஹா கிண்டல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*கல்லூரி கனவு’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை முதல் ரூ. ஆயிரம் கல் லூரி உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
தி இந்து:
* இட ஒதுக்கீடு விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு பாஜகவை ஆட்டிப் படைக்கும் என்கிறார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்
* இந்தியா கூட்டணி ஜூன் 4-க்கு பிறகு அமைந்ததும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் பணி தொடங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி; சாதாரண இந்தியர்களிடம் இருந்து குட்டி முதலாளிகளுக்கு செல்வம் பறிக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
* இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற ஆட்சி அமைக்கும்: சீதாராம் யெச்சூரி
* பீகாரில் நடைபெற்ற அக்னிபாத் எதிர்ப்புப் போராட் டங்களின் தாக்கம் தேர்தலில் இளைஞர்களிடையே எதி ரொலிக்கும்.
தி டெலிகிராப்:
* பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று சந்தேஷ் காலியில் நடைபெற்ற கலவரத்தில் ‘உயிர் பிழைத்தவர்’ வீடியோவில் கூறுகிறார். குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்திக்க டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேஷ்காலி “பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்களில்” சிலர் “ஆள்மாறாட்டம் செய்வதற்காக” பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பாஜகவின் பாசிர் ஹாட் வேட்பாளர் ரேகா பத்ரா கூறுவதாக வீடியோ உள்ளது. காவல்துறை விசாரணை.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment