திருப்பூர், மே 13- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-.05-.2024 முற்பகல் 12.30 மணியளவில் அவிநாசி திருமண மண்டபத்தில் நடை பெற்றது மாவட்ட கழக காப்பாளர் அ. இராமசாமி கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்
மாவட்ட கழக தலைவர் யாழ். ஆறுச்சாமி, மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட கழக துணைத் தலைவர் முத்து. முரு கேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கம் மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பதின் அவசியம் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார்.
பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கா.மைனர், அவிநாசி பகுத்தறிவாளர் களாக பொறுப்பாளர் பா. வீரப்பன், அவிநாசி ஆ.பொன் னுச்சாமி, அவிநாசி பா.பழனிச் சாமி சின்னேரிபாளையம் ராமு, பருத்தியூர் ராமச்சந்திரன, குரும்பபாளையம் முத்து உள் ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றி னர்.
மாவட்ட காப்பாளர் அவி நாசி அ.இராமசாமி முதற்கட் டமாக விடுதலை 5 விடுதலை சந்தாகளை வழங்கினார்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
24-.3.-2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்டு ஏடான விடுதலைக்கு திருப்பூர் கழக மாவட்ட சார்பில் 100 விடுதலைச் சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது
சுயமரியாதை இயக்க நூற் றாண்டுவிழா- குடிஅரசு ஏடு நூற்றாண்டுவிழா கூட்டங் களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment