புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது கலந்துறவாடல் கூட்டத்தில் தோழர்கள் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது கலந்துறவாடல் கூட்டத்தில் தோழர்கள் முடிவு

featured image

புதுக்கோட்டை மே 9- புதுக் கோட்டை மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு!
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 04.05.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.அறி வொளி தலைமை வகித்தார். மாவட்ட கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலா ளர் ப.வீரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் சு. கண்ணன் மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் கூட் டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.

அவருடன் மேலும் பொதுக் குழு உறுப்பினர் செ.இராசேந் திரன், கழக நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, நகர அமைப் பாளர் பி.சேகர், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.காரல் மார்க்ஸ், தொழில் நுட்ப அணிப் பொறுப்பாளர் துரை.இந் திரஜித், பெரியார் பிஞ்சு சு.க.கதிர வன், ம.மு.கண்ணன், உள்ளிட் டோர் கலந்து கொண்டு விடுதலைச் சந்தாக்களைச் சேர்க்க வேண்டி யதன் அவசியம் பற்றியும் விடுதலை நாளேடு கடந்த காலங்களில் தந்தை பெரியார் காலம் தொட்டு, அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்வரை அரசியல் ரீதியாக ஏற்படுத்திய தாக்கம், சமூக மாற்றங்களில் விடுதலை நாளேட் டின் பங்கு உட்பட திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாது, ஆதர வாளர்கள், எதிரணியில் உள்ள வர்கள் எல்லாம் அரசியல் ரீதி யிலான கருத்துகளைப் பெறு வதற்கு விடுதலையில் வந்த கட் டுரைகள் எந்த மாதிரியான தாக் கங்களை ஏற்படுத்தியிருக்கிறது, தமிழர்கள் மத்தியில் விடுதலையின் தொடர் கருத்துரைகள் பரவ வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள்.
மேலும் தங்களால் இயன்றவரை அய்ந்து முதல் பத்து சந்தாக்களை சேர்த்துத்தர உறுதியேற்று அதற் கான சந்தாப் புத்தகங்களையும் மகிழ்வுடன் பெற்றுச் சென்றனர். தலைமைக் கழகம் இட்ட பணி யைச் செம்மையாகச் செய்து முடிப்பதாக உறுதியளித்தனர்.

No comments:

Post a Comment