வந்தவாசி, மே 12– திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
9ஆவது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே, கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மய்யத்தில் படித்து தனித்தேர்வராக 10ஆம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
Sunday, May 12, 2024
10ஆம் வகுப்பு தேர்வில் தாயும் மகனும் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment