ரேபரேலி, மே 15– மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். உபி மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதா வது: ராகுல் காந்தி சத்தியத்தின் பாதையில் இறங்கியுள்ளார். அவர் எப்போதும் இந்த பாதை யில் நடப்பார். மோடிக்கு மக்க ளுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தனது ஆடைக ளைப் பற்றி கவலைப்படுகிறார். அவரது ஆடைகளில் சேறு ஒட் டாமல் இருக்க வேண்டும் என்று கவலைப்படுகிறார். விவசாயிக ளின் கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டால் நாட்டில் பணம் இல்லை என்று மோடி கூறுகிறார். ஆனால் அவரால் தொழிலதிபர்களின் கடனை தள் ளுபடி செய்ய முடிந்தது. மோடி ஆட்சியில் 70 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
-இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment