சென்னை,மே14-பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை, மே 14) வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவிகிதம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மய்யங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாண வர்கள் மற்றும் 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில் 8 லட்சத்து 11,172 பேர் தேர்வு எழுதினர்.
இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6இல் தொடங்கி 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதி வேற்றம் உள்ளிட்ட இதர பணி களும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீக்ஷீமீsuறீts.ஸீவீநீ.வீஸீ மற்றும் ஷ்ஷ்ஷ்.பீரீமீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மய்யங்கள் (என்அய்சி) மற்றும் அனைத்து மய்ய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஷ்ஷ்ஷ்.பீரீமீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment