தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம்

featured image

சென்னை, மே 23 1 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர் களுக்கான பாடநூல் களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித் தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிக மான அரசு மற்றும் நிதி யுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார்75 லட்சம் மாணவர்கள் படிக்கின் றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகம் மேற்கொண்டு வருகிறது.

அரசு மற்றும் நிதி யுதவி பெறும் பள்ளி களின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனி யார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படு கின்றன.
அதன்படி வரும் (2024_20-25) கல்வியாண் டுக்காக மொத்தம் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, அரசு, அரசு உதவி பள்ளி மாண வர்களுக்கு வழங்க 2.9 கோடி புத்தகங்கள், தனி யார் பள்ளிகள் விற் பனைக்காக ரூ.1.2 கோடி புத்தகங்கள் ஆகும். தற் போது பாடநூல்களை பள்ளிகளுக்கு விநியோ கம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள் ளன. இதுகுறித்து பள் ளிக்கல்வித் துறை அதி காரிகள் சிலர் கூறும் போது, ‘‘கோடை விடு முறைக்கு பின்னர் பள் ளிகள் ஜூன் முதல் அல் லது 2-ஆவது வாரத்தில் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறந்தவு டன் முதல் வாரத்துக்குள் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்கு முதல் பருவ பாடப் புத்தகங்களும் ,8 முதல் 12ஆ-ம் வகுப்பு வரை

படிக்கும் மாணவர் களுக்கான முழு புத்தகங் களும் வழங்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டக் கல்வி அலு வலகங்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அச்சிடப்பட்ட பாட நூல்கள் குடோன்களில் இருந்து அந்தந்த மாவட்டக் கல்விஅலுவ லகங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக் கான பாடநூல்கள் விற் பனை கடந்த மே 15-ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. சென் னையில் நுங்கம்பாக்கம் டிபிஅய் வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இதே போல், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நோட் டுப் புத்தகங்களும் முழு மையாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வரு கிறது’’ என்றனர்.

No comments:

Post a Comment