தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்!

featured image

“ஒரு விரல் புரட்சி”க்கு வாக்காளர்களே தயாராவீர்.!

நெல்லை, ஏப்.4- தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்கான அடுக்கடுக்கான சாதனை களை சாதித்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் இந்தியா முழுவதும் மலர வேண்டும் என்றால் – மாநில உரிமைகள் மீட்கப்பட்டு உரிமை சார்ந்த மக்களின் வாழ்வு மேம் பட வேண்டுமென்றால் – சமூக நீதி இட ஒதுக்கீட்டின் மூலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் – நீட், க்யூட், நெக்ஸ்ட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், தனி யார் துறையிலும் இட ஒதுக்கீடு தாழ்த் தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால் _ – வேலையில்லா திண்டாட்டம் அகன்று இளைஞர்கள் பல லட்சம் பேர் வேலை பெற வேண்டுமென்றால் -_மதச்சார்பின்மை பேணி பாதுகாக்கப் பட்டு மக்களின் உள்ளத்தில் சகிப்புத் தன்மை ஏற்பட வேண்டுமென்றால்_- மாநில பட்டியலுக்கே கல்வி மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றால் -_விவசாயிகள் தொழிலாளர்கள் நலன் பேணப்பட வேண்டுமென்றால் _- சமு தாய சீர்திருத்தத்துறை உருவாக்கப்பட வேண்டும் என்றால் – ஜாதி தீண்டாமை கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் _ மீனவர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண் டும் என்றால் _- வறுமை அகன்று பட் டினிச் சாவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் – தொழில் வளம் பெருகிட வேண்டுமென்றால் _- பெண்க ளின் மீதான பாலியல் அத்துமீறல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் – சேது கால்வாய் திட்டம் முழுமையான செயல் பாட்டுக்கு வர வேண்டுமென்றால் -_ மொத்தத்தில் எல்லோருக்கும் எல்லா மும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி வேட் பாளர்களை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் வாக்காளர்களே உங்களுக்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காக தான் எங்களின் பரப்புரை பயணம் 91 வயதிலும் துவளாத உடல் துன்பங்களை தாங்கிக் கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார பெரும் பயணம் தமிழ்நாட்டை குறுக்கும் நெடுக்குமாக 16 நாட்கள் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில்! சிந்திப்பீர் செயல்படுவீர்! ஒரு விரல் புரட்சிக்கு தயாராவீர்!
(திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் 2.4.2024)

No comments:

Post a Comment