சென்னை,ஏப்.8 – கச்சத்தீவை மீட்சு குரல் கொடுக்கப்படும் என்றும், குடியு ரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க. முதன்மை செயலா ளர் துரை வைகோ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ம.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் 6.4.2024 அன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஜி. எஸ்.டி. வரி நீக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட் டம் திரும்பப் பெறப்படும். ஹைட்ரோ கார் பனுக்கு நிரந் தர தடை விதிக்கப்படும் கச்சத் தீவை மீட்கக் குரல் கொடுக்கப்படும். திருக் குறளை தேசிய நூலாக அறிவிக்கநடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தப்படும். காவிரி விவகா ரத்தில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும். சேதுகால்வாய் திட்டம் நிறைவேற்றப் படும் என்பன உள்பட 74 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாடு அரசு டன் இணைந்து சிறப்பு திட்டங்கள் உரு வாக்கப்படும். பாய்லர் ஆலை தொழிற் சாலை நலிவிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பாய்லர் ஆலை நிறுவ னத்தை நம்பி உள்ள சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் பாதுகாக்கப்படும். துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறீரங்கத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா கூட் டணி ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என முதலமைச் சர். மு.க.ஸ்டாலின் கூறியதை அப்படியே நானும்,ம.தி.மு.க.வும் வழிமொழிகிறோம்.
கச்சத்தீவு
இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர் கள் ஓர் இனத்தையே அழித்த அகம்பாவத் திலும், ஆணவத்திலும் கச்சத்தீவை திருப்பி தரமாட்டோம் என்று கூறி வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இருந்து கச்சத்தீவு நமக்கு சொந்தம். ராமநாதபுரம் அரசருக்கு சொந் தம். இது நமது தீவு என்றுதான் நான் நாடா ளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். இதுகுறித்து நாடாளுமன்ற இரு அவைகளி லும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றமே முடிவு எடுக்கலாம். ஏற்கெனவே இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு, அந்த வழக்கை விரை வுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் படும். -இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment