காரைக்கால், ஏப். 5- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று (4.4.2024) தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தை தொடங்கினர்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீன வர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங் கைகடற்படையினர் அடிக்கடி கைதுசெய்கின் றனர்.
மேலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றனர். பின்னர், ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின் றனர். ஆனால், படகு களை ஓட்டிச் செல்லும் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படு வதுடன், படகுகளையும் இலங்கை அரசு விடுவிப்ப தில்லை.
தற்போது 6 மாத சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மாவட்டத் தைச் சேர்ந்த 2 மீனவர்க ளையும், 4 படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் வேலைநிறுத்தப் போராட் டம் மற்றும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்றும் காரைக் கால் மாவட்ட மீனவர் கள் ஏற்கெனவே அறிவித் திருந்தனர்.
ஆனால், எந்த நட வடிக்கையும் எடுக்கப் படாத நிலையில், காரைக் கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சிறையில் உள்ள மீனவர் களையும், பறிமுதல் செய் யப்பட்ட விசைப்படகுக ளையும் விடுவிக்க வலியு றுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், 2 நாட்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால், தங்களின் விசைப்படகு களில் கருப்புக் கொடியை ஏற்றவும் முடிவு செய்து உள்ளனர். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தை தொடங்கினர். இதனால் படகுகள் கட லுக்குச் செல்லாமல், கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment