புதுடில்லி, ஏப்.5- வாக் குப் பதிவின்போது, யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத் தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக் கப்படுகிறது.
இந்த இயந்தித்தின் மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக் கப்பட்டது என்ற ரசிது களையும் எண்ண வேண் டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றத் தின் இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற் றுள்ளது.
நாடு முழுவதும் சட்ட மன்றம் மற்றும் மக்க ளவை தேர்தலில் வாக்க ளிப்பதற்கு எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின், அதாவது இவிஎம் இயந் திரம் பயன்படுத்தப்பட்ட வருகிறது.
இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது வாக்காளர்களுக்கு தெரி யாது. இதனால், அதை உறுதிப்படுத்தும் வகை யில், விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத் தப்பட்டது.
ஆனால், இந்த இயந் திரம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர வில்லை. முக்கிய வாக்குச் சாவடிகளில் மட்டுமே வைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாக்காளர் எந்த சின்னத்துக்கு வாக்க ளித்தார் என்பதை உறுதி படுத்திக் கொள்ளலாம்.
இந்த இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவ டிகளிலும் இணைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரு கின்றன. ஆனால், இதற்கு செலவு அதிகமாகும் என் பதால், அதை ஒன்றிய அரசும், தேர்தல் ஆணை யமும் முழுமையாக செயல்படுத்தாமல் தாம தித்து வருகிறது.
அதே வேளையில், இந்திய தேர்தல் ஆணை யம், இவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால், விவிபாட் ரசீதுகள் எண் ணப்பட வேண்டிய தில்லை என தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவி பாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப் பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர் பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17ஆ-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங் கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெய் ராம் ரமேஷ், “இது தொடர்பாக “இந்தியா” கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன் றம் தற்போது தாக்கீது அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Friday, April 5, 2024
Home
இந்தியா
தேர்தலில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வழக்கு தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது
தேர்தலில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வழக்கு தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment