காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

featured image

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு
ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது உறுதி
ப.சிதம்பரம் பேட்டி

மீனம்பாக்கம், ஏப். 6- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் நிச்சயம் வழங்கப்படும்
டில்லியில் இருந்து விமா னம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சென்னை விமான நிலை யத்தில்

செய்தியாளர்களி டம் கூறியதாவது:-
11 சதவீதம்தான் ஏழை குடும்பங்கள் என அரசு சொல்கிறது. முறையான கணக்கெடுப்புகள் நடத் தப்பட்டு காங்கிரஸ் தேர் தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை குடும்பத் தில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிச்சயம் வழங்கப் படும். பா.ஜனதா பணக் காரர்களுக்குதான் கல்வி கடன் வழங்கினார்கள். கல்வி கடன் வாங்கியவர் கள் திருப்பி கட்ட வேண் டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். ஆனால் கல்விக் கடன் கட்டுவதற்கு வேலை இல் லையே. வேலையில் லாமை பெருகிவிட்ட தால் கல்விக் கடனை தவணை முறையில் மக்க ளால் கட்ட முடிய வில்லை. 2007-2008ஆம் ஆண்டு விவசாய கடனை ரத்து செய்தது காங்கிரஸ் அரசாங்கம் தான். அது போல கல்வி கடனையும் ரத்து செய் வோம். இது இளைஞர்களுக்கு தேவையான அறிவிப்பா கும்.

தவறான செய்தி
உள்ளாட்சித் தேர்த லில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கிறோம். புதிதாக உருவாக்கப்படும் அரசு மற்றும் தனியார் நிறுவ னங்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. அதற்கு மனசுதான் வேண்டும். நீட் தேர்வு வந்ததற்கு காரணம் காங்கிரஸ் என தவறான செய்தி பரப்பப் படுகிறது. உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பின்படிதான் நீட் தேர்வு அமல்படுத்தப் பட்டது. எனவே, விருப்ப முள்ள மாநிலங்கள் நீட் தேர்வு நடத்திக்கொள்ள லாம். விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு விலக்கு தாருங்கள் என கோரி உள்ளோம். ஏற்கெனவே எஸ்.சி, எஸ்.டி. இட ஒதுக்கீடு நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள் ளது. மண்டல் கமிஷனின் பரிந்துரையின்படி 54 சதவீதம் இருக்கும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக் கிறது. இந்தநிலையில் 50 சதவிதம் தான் இட ஒதுக் கீடு கொடுக்க வேண்டும் என்ற உச்சவரம்பை நீக்கு வதன்மூலம் பிற்படுத்தப் பட்ட மக்கள் பயன்பெற முடியும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment