4.4.2024
தி இந்து
♦ நட்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் 582 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்தன, அதில் 75 விழுக்காடு பாஜகவுக்கு சென்றுள்ளது.
♦ ஆளும் பாஜகவுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கிய குறைந்தது 45 நிறுவனங்களின் நிதி ஆதாரங்கள் சந்தேகத்திற்குரியவை என இந்து பத்திரிகையின் ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
♦ வெள்ள பாதிப்பு நிவாரணம் தராமல் இழுத்தடிப்பு ரூ.2000 கோடி நிதி கோரி தமிழ்நாடு அரசு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது; – ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
♦ மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்ற மனுவின் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்தில் விசாரணை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக எம்.பி. உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். மகாராட்டிரா ஜல்கான் மாவட்டத்தில் பாஜகவிற்கு பின்னடைவு.
♦ பாரதிய ஜனதா சமூகத்தின் மீது ஒரு சுமை’; பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் இனி தேர்தல் நடக்காது என திரிபுரா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தேர்தல் அறிவித்த நிலையில் என்னை கைது செய்தது உள் நோக்கம் கொண்டது என டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதம். மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
♦குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக சத்திரிய சமூகத்தினர் போர்க்கொடி.
தி டெலிகிராப்
♦ மோடியின் ஜும்லாவுக்கு எதிராக காங்கிரஸின் உத்தரவாதம்: வயநாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தியால் ஒரே நேரத்தில் தொடங்கப் பட்ட வீடு வீடாகச் சென்று உத்தரவாத அட்டை வழங்கும் திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள எட்டு கோடி குடும்பங்களைச் சென்றடைய காங்கிரஸ் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
♦ வடலூரில் வள்ளலார் உலகளாவிய மய்யம் கட்ட தடை விதிக்க முடியாதென தமிழ்நாடு பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் வளர்ச்சிப் பிரிவு மாநிலச் செயலர் எஸ்.வினோத் ராகவேந்திரன் தொடர்ந்த மனு மீது சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment