கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.4.2024
தி இந்து:
* பாஜக மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் கூட்டாட்சி ஆட்சி முடிந்துவிடும் என கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மேனாள் நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் எச்சரிக்கை.
* இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரையை மீறி தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வர பாஜகவின் “நிர்ப்பந்தம்” காரணமாக நாடு ஒரு விலையை கொடுத்துள்ளது என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மோடி அரசின் டிஜிட்டல் கொள்ளை – ஏழைகளின் வங்கிப் பணத்தை, குறைந்தபட்ச நிலுவை இல்லை என மோடி அரசு கொள்ளையடித்துள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
* ஏப்ரல் 12இல் கோவையில் ராகுல், மு.க.ஸ்டாலின் இணைந்து தேர்தல் பரப்புரை.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு. சிஏஏ சட்டம், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், பணச் சலவைத் தடுப்புச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படும்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக இந்திய அரசமைப்பை அகற்ற விரும்புகிறது. நாங்கள் இந்தியாவைக் காப்பாற்ற கூட்டுப் போராட்டம் நடத்துகிறோம் என என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா பேச்சு.
தி டெலிகிராப்:
* எனக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது, நான் பயப்பட மாட்டேன் என்று மோடி கூறுகிறார். உங்களுக்கு பயமில்லை என்றால், ஏன் எங்கள் நிலத்தின் பெரும் பகுதியை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டுவிட்டீர்கள் என மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி.
* உயர் பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தனது கட்டளையின்படி அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி, நசுக்கினால் நாடு எங்கே போகும் என்று குடிமக்கள் இப்போது சிந்திக்க வேண்டும். தேசம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள். சுயபரிசோதனை மற்றும் விழிப்புணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment