ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி, ஏப்.4- கச்சத்தீவு தொடர் பான ஆவேச அறிக்கைகள், இலங்கை அரசுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே மோத லுக்கு வழி வகுக்கும் என்று ப.சிதம் பரம் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
35 லட்சம் தமிழர்கள்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக காங்கிரஸ், தி.மு.க. மீது பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ஒன்றிய மேனாள் நிதியமைச்சரும், காங் கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ வலைத் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், மற்றவர் களும் இந்தியா-இலங்கை இடையிலான உறவை சீர்குலைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, இலங்கையில் 25 லட்சம் இலங்கை தமிழர்களும், 10 லட்சம் இந்திய தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, 50 ஆண்டுகளுக்கு பிறகு கச்சத்தீவு குறித்து உண் மைக்கு மாறான ஆவேச அறிக் கைகள் வெளியிடுவது. இலங்கை அரசுக்கும். 35 லட்சம் தமிழர் களுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்து விடும்.
சீனாவிடம் காட்டுங்கள்
ஒன்றிய அரசு தனது போர்க் குணத்தை சீனாவிடம் காட்டட் டும். பா.ஜனதா ஆட்சிக்காலத்தில், சீனா 2 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது.
அந்த இடங்களின் பெயர்களை மாற்றுவதில் சீனா தீவிரமாக இருக் கிறது. சீனாவின் செயல்கள் குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சர் அடக்கி வாசிப்பது ஏன்?
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment