பிஜேபியில் சேராவிட்டால் கைது செய்வதாக மிரட்டல் டில்லி பெண் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

பிஜேபியில் சேராவிட்டால் கைது செய்வதாக மிரட்டல் டில்லி பெண் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

featured image

புதுடில்லி, ஏப். 3- தங்களை பாஜகவில் சேரும் மிரட் டல் விடுக்கப்பட்டு வரு வதாகவும், இல்லையேல், மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில டைக்க அமலாக்கத்துறை திட்டம் தீட்டி உள்ள தாகவும் டில்லி மாநில அரசின் ஆம்ஆத்மி கட்சி யைச் சேர்ந்த அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி உள்ளார்.
டில்லி புதிய மதுபான கொள்கை விவ காரத்தில் முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டு உள் ளார். அவர், சிறையில் இருந்து அரசு பணிகளை மேற்கொள்ள அனுமதிக் கபடாது என்று அமலாக் கத்துறை தெரிவித்து உள்ளார். ஆனால், கெஜ்ரிவால், நீதிமன்ற காவ லில் இருந்தாலும், முதல் வராகத் தொடர்ந்து வரு கிறார். கெஜ்ரிவால் சிறை யில் இருந்தபடி உத்தரவு களைப் பிறப்பித்து வருவ தாக டில்லி அமைச்சர் அதிஷி கூறி வருகிறார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந் தித்த ஆம்ஆத்மி அமைச் சர் அதிஷி, ஒன்றிய பாஜக அரசு மற்றும் அம லாக்கத்துறை மீது பல் வேறு குற்றச்சாட்டுக் களை கூறினார். தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர் கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட் டினார்.
ஆனால், யார் கைது செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறியவர், எங்களது வீடு களில் விரைவில் அம லாக்கத்துறை ரெய்டுகள் நடக்கும், பின்னர் நாங் கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்படு வோம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

ஏற்கனவே கெஜ்ரி வால் உள்பட சில கைது செய்துள்ள அமலாக்த்த துறை தற்போது, அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைத்து செயலாற்றி வருகிறது என்றார். தொடர்ந்து பேசியவர், “எனது அரசியல் வாழ்க் கையை காப்பாற்று வதற்காக எனது நெருங் கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணு கியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறை யால் கைது செய்யப்படு வேன் என்றவர், நீதிமன்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை சவுரப் பரத்வாஜ் மற்றும் எனது பெயரை (அதிஷி) தெரிவித்தது என்றவர், டில்லி மதுபான கொள்கை வழக்கில் ஒன்றரை ஆண் டுகளாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.அய்.யிடம் கிடைத்த அறிக் கையின் அடிப்படையில் இதனை சொல்கிறேன்.

இது தொடர்பான விவ ரங்கள் அமலாக்கத்துறை யின் குற்றப்பத்திரிகையி லும், சி.பி.ஐ. குற்றப்பத்திரி கையிலும் உள்ளது என் றார். இதனை தற்போது கூறுவதற்கு காரணம் என்ன என எழுப்பப் பட்ட கேள்விக்கு, அர விந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகி யோர் சிறையில் இருந் தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாக வும் வலுவாகவும் இருப் பதால், கட்சியை உடைக் கும் நோக்கில், பாஜக இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றவர், அதன் காரண மாக, ஆம் ஆத்மி கட்சி யின் அடுத்த கட்ட தலைமை நிர்வாகிகளை சிறையில் அடைக்க திட்ட மிட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment