கழகப்பொறுப்பாளர்கள் முயற்சியால்
சிலையை மூடியிருந்த சாக்குத்துணி அகற்றம்
புதுச்சேரி, ஏப். 5- உழவர்கரை நகராட்சி, மூலைக்குளம் வளைவில் உள்ள தந்தை பெரியார் சிலை, சாக்குத் துணியால் மூடப்பட்டது . கழகத் தோழர்கள் முயற்சியால் அகற்றப்பட்டது.
புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களின் சிலைகள் சாக்குத் துணியால் மூடப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை என்றாலும், தந்தை பெரியார் சிலை மூடுவது தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால் மூலைக் குளத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை சாக்குத் துணியால் மூடப்பட்டது. அதனை உரிய முறையில் கடிதம் மூலம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தந்தை பெரியார் அரசியல் வாதி கிடையாது.
சமூக சீர்திருத்த வாதி ஜாதி, மத வேறுபாடுகள் களையவும் சமத்துவ சமுதாயம் மலரவும், பெண் அடிமைத் தனம் ஒழிக்கப்படவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த மாமனிதர்.
கடந்த காலங்களில் அதனை போன்று சிலை மூடும் தவறுகள் அங் கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற் றது. அதனைத் தவிர்க்கின்ற வகையில் சென்னை உயர்நீதி மன்றம் தேசியத் தலைவரானத் தந்தை பெரியார் சிலையை மூடக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. அதன் நகலும் கடிதத்துடன் இணைக்கப்பட்டது.
இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை மேற்கொண்டார் . தற்பொழுது தந்தை பெரியார் சிலையில் மூடப்பட்ட சாக்குத் துணி அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு புதுச்சேரி மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment