ஆசிரியர் அய்யாவுக்கு 91 வயதாகிவிட்டது. எதற்கு பரப்புரைக்குச் செல்கிறீர்கள் என்று எல் லோரும் சொன்ன தாக எனக்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள். சொல்லவேண்டியது அவர்கள் கடமை! ஆனால், நான் ஒருநாளும் அப்படிச் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். அவரை எனக்குத் தெரியும்! ஏன் தெரியும் என்றால்? இதே போல அய்யா பெரியாருக்கு 92 ஆம் பிறந்தநாள், திருச்சி என்று கருதுகிறேன். ’அய்யா நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டது. திராவிட முன் னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. நீங்க என்ன சொன்னாலும் முதலமைச்சர் கலைஞர் செய்வதற்குத் தயாராக இருக்கிறார். ஆகவே நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே?’ என்று அவரை வைத்து கொண்டே பேசினார்கள். அதுக்கு அய்யா சொன்னார், “தோழர் பேசுனாரு என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி. காலையில் இரண்டு இட்லி சாப்பிடறேன்; மதியம் ஒரு கை புலால் உணவு சாப் பிடுகிறேன்; இரவு இரண்டு சப்பாத்தி சாப்பிடுகிறேன்; இடையில் இரண்டு தேனீர் குடிக்கிறேன். இதுவெல் லாம் தானாக வரவில்லை. இதற்காக எங்கோ ஒரு தொழிலாளி தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்ட வன் உழைத்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு சுயமரியாதை வரும் வரை நான் என்னுடைய பயணத்தை நிறுத்த மாட்டேன்’ என்று சொன்ன ஒரு தலைவர் உலகத்தில் பெரியார் ஒருவர்தான்! அவருடைய பிம்பமாக, பிரதியாக இருக்கிற இவரை வராதீங்க என்று சொன்னால் வராமல் இருப்பாரா? அதனால் தான் நான் சொல்வதில்லை! பெரியார் எந்த முடிவு எடுத்தாரோ அந்த முடிவை ஆசிரியர் எடுப்பார். அப்படிப்பட்ட ஒரு தலைவர் இங்கே வந்திருக்கிறார்.
சிலர் என்னிடம், ‘ஏங்க உங்களைப்பற்றி 2ஜி அது இதுன்னு என்னென்னமோ சொல்றாங்க. நீங்கள் உங் களை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்கிறீர் களே? கொள்கையில் தெளிவாக இருக்கிறீர்களே? உங்களுக்கு பயமாக இல்லையா? இந்தக்குணம் உங்கள் அப்பா, அம்மா கொடுத்ததா?’ என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் பதில் சொன்னேன், “இது எங்க அப்பா, அம்மா கொடுத்ததில்லை. இதோ மேடையில் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு இருக்கிறாரே இவர் கொடுத்தது தான்! இந்த கருப்புச்சட்டை தான் எங்களுக்கு கவசம்! நான் எந்தப்பாசறையில் வளர்ந்தேனோ, அந்தப் பாசறையிலிருந்து எங்களைத் தயாரித்தவர் இங்கே வந்திருக் கிறார். இன்றைக்கு நான் இருக்கும் நிலைக்குக் காரணம் திராவிடர் இயக்கம் தான்! தந்தை பெரியார்; பேரறிஞர் அண்ணா; கலைஞர்; முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் என்கிற மகத்தான மனிதன். எங்களை யெல்லாம் பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்! இவர்கள் தான் காரணம்.
கடந்த 10 ஆண்டுகள் மோடி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்; இந்திய அரசியல் சட்டத்தை மாற்றுவேன் என்கிறார். அவரை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச் சர். அவருக்கெல்லாம் கொள்கை பலமாக; அவரை இயக்கிக் கொண்டிருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம்; தமிழர் தலைவர் இருக்கிறார்கள். எனவே முதலமைச்சரின் குரலுக்கு வலு சேர்ப்பதற்கு என்னை மீண்டும் நாடாளு மன்றத்துக்கு அனுப்பி வையுங்கள். நன்றி!
– கோத்தகிரியில் மாண்புமிகு ஆ. ராசா
(7.4.2024)
No comments:
Post a Comment