புதுடில்லி,ஏப்.5- மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முதல மைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சில நாள்களுக்கு முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அனுப் பிய செய்திக்குறிப்பை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று (4.4.2024) வாசித்தார். அதில் கூறப்பட்டதாவது:
நான் சிறையில் அடைக்கப்பட்டிருந் தாலும் எனது குடும்பமான டில்லியின் 2 கோடி மக்களும் எந்த விதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடாது.
ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாள் தோறும் உங்கள் தொகுதிகளை கட்டாயம் பார்வையிடுங்கள். கட்சி செயல்பாடுகளைத் தாண்டி மக்களின் குறை தீர்ப்பதே நமது கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை யால் கைதுசெய்யப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிஎஸ் அரோராஅடங்கிய அமர்வு கூறுகையில்,“தனிநபரின் விருப்பு வெறுப் பைவிட தேசநலனே முக்கியம். கெஜ்ரிவால் டில்லி முதலமைச்சராக தொடர முடிவெடுத்து விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க மட்டுமே நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment